Monday, May 31, 2010

இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் தீண்டாமை தலை தூக்க முடியாது பிரகாஷ் காரத் பெருமிதம்


புதுக்கோட்டை, மே30-

கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருக் கும் மாநிலங்களில் ஒரு காலமும் தீண் டாமை வளர முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசினார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் முதல் மாநில மாநாட்டில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. ஜனநாயக இயக்கமாக பரிணமித்துள்ளது. சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடு மைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த இயக்கம் மூலம் காலம் கனிந்துள்ளது. தீண்டாமை என்ற இழிவை மண்ணில் இருந்து துடைத்தெறிய டாக்டர் அம்பேத் கர், ஜோதி பாபுலே, தந்தை பெரியார் கனவு கண்டனர். அத்துடன் போராட்டம் நடத்தி பல தியாகங்களைச் செய்தனர். ஆனாலும், அவர்களின் நோக்கம் இன்னும் நிறை வேறாமல் உள்ளது.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நடத்தாவிட்டால் சிறந்த கம்யூனிஸ்ட்டாக முடியாது. அத்தகைய போராட்டங்களை பி.டி.ரணதிவே, .கே. கோபாலன், .எம்.எஸ். ஆகியோர் துவக் கினர். வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக வும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர்கள் நடத்திய போராட் டங்கள் இன்னும் தொடர்கின்றன. கம்யூ னிஸ்ட்டுகள் வலுவாக உள்ள மாநிலங் களில் தீண்டாமைக் கொடுமைகள் ஒழிக் கப்பட்டுள்ளன. மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய இடதுசாரிகள் ஆட்சி நடத் தும் மாநிலங்களில் பொதுப்பாதை மறிக் கும் வழக்கம் இல்லை. தலித்துகள் ஆல யத்திற்குள் செல்வதற்கு தடை கிடையாது. இரட்டை குவளை முறை என்ற பாகுபாடு இல்லை. கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒரு காலமும் தீண்டாமை வளர முடியாது.

புதிய பாதை

ஆனால், தமிழகத்தில் மோசமான தீண்டாமையின் வடிவங்களைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் இந்தக்கொடுமை களில் இருந்து மக்களைக் காக்க போராடி வருகிறோம். தமிழகத்தில் 7 ஆயிரம் கிரா மங்களில் தீண்டாமைக் கொடுமை உள் ளதாக அரசுப் புள்ளி விபரம் கூறுகிறது. ஆகவே, இப்பிரச்சனைகளைக் களைய தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 3 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டு பாடு பட்டு வருகிறது. இந்த அமைப்பு, தீர்மா னங்கள், அறிக்கைகள் வெளியிடும், மனுகொடுக்கும் அமைப்பாக மட்டும் இல்லை. மக்களைத் திரட்டுவதுடன் பல்வேறு தலித் அமைப்புகளை இணைத் துக்கொண்டு ஜனநாயக இயக்கங்களின் ஆதரவோடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி நாட்டிற்கு புதிய பாதையைக் காட் டியுள்ளது.

வெட்டப்படும் இடஒதுக்கீடு

உத்தப்புரத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் அரசுக்குத் தெரியவில்லை. அதைச் சுட்டிக்காட்டியதுடன் அகற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி தான் களத்தில் இறங் கியது. அந்தப்பணியில் ஈடுபட்ட தோழர் களைப் பாராட்டுகிறேன். அருந்ததிய மக்களின் உரிமைப்போராட்டங்கள், தலித் கிறிஸ்தவர்கள் போராட்டங்கள், தலித் பிரிவில் உள்ள அத்தனை மக்களுக்கான போராட்டத்தை முன்னைவிட பல மடங்கு நடத்த வேண்டியுள்ளது.

மத்திய அரசு கடைப்பிடிக்கும் பொரு ளாதாரக் கொள்கைகள் சாதாரண மக்க ளின் வாழ்வுரிமை, தலித் மக்களின் வாழ் வுரிமைக்கு எதிராகவும் தாக்குதல் தொடுத் துக் கொண்டிருக்கிறது.பொதுத்துறை தனியார்மயமாக்கப்படுவதால் தலித் மக்களின் இடஒதுக்கீடு வெட்டிச்சுருக் கப்படுகிறது. புதிய வேலை நியமனமும் தடை விதிக்கப்படுகிறது. இதனால், இடஒதுக்கீடு பொருளிழந்து போகிறது. தனியார் வேலைவாய்ப்பிலும் இடஒதுக் கீடு இல்லை என்ற நிலையில் அரசுத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை வெட்டிச்சுருக்கும் வேலையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டி ருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை களுக்கு எதிராக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் போராட முன்வரவேண்டும். இப் படிப்பட்ட போராட்டம் மூலம் மட்டுமே தலித் மக்களின் வாழ்வுரிமையை பாது காக்க முடியும்.

வேலைவாய்ப்பை மட்டுமின்றி உயர் கல்வித்துறையையும் மத்திய அரசு தனி யார்மயமாக்கி வருகிறது. அந்நிய கல்வி நிலையங்களுக்கு அனுமதி வழங்க இந்திய அரசு சட்டம் கொண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறது. இத னால் தலித் மற்றும் பழங்குடி, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக் காமல் போகும். உயர்கல்வி என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும். தனியார் கல்வித்துறையில், வேலை வாய்ப்புத்துறையில் இடஒதுக்கீடு வேண் டும் என தொடர்ந்து போராடி வரு கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசு இக்கோரிக்கையை ஏற்க மறுக் கிறது.

தனியார் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று ஒன்றுபட்ட போராட்டம் நடத்த வேண் டும். தலித்துகள் கிறிஸ்தவர்களாக இருந் தாலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. நாடாளுமன்றத் தில் இந்தப் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புவோம். தலித் மக்கள் எந்த மதத் தில் இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற் காக இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகப் படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகி றோம்.இவ்வாறு பிர காஷ்காரத் பேசினார். அவரின் ஆங்கில உரையை மாதர் சங்க மாநிலப்பொதுச்செயலாளர் .வாசுகி தமிழாக்கம் செய்தார்.