Sunday, May 30, 2010

உத்தப்புரம்: நேரடியாக களம் இறங்குவோம்!



மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் மக்களுக்காக திறந்துவிடப்பட்ட பொதுப் பாதையை முழுமையாக தலித் மக்கள் பயன்படுத்தவும், நிழற் குடை அமைத்து தரவும் தமிழக அரசு ஜூன்-30ந்தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட் டால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி நேரடியாக களத்தில் இறங்கி போராட்டம் நடத்தும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக, மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தலித் இட ஒதுக்கீடு சதவீதம் உயர்வு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, நிலு வைக் காலியிடங்கள் நிரப்பப்பட வேண் டும். தலித் உட்கூறு திட்டங்களின் முறை யான அமலாக்கத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். 2010-11ம் ஆண்டில் தலித் மக்கள் தொகைக்கேற்ப பட்டியல் இனத்தவர் துணைத்திட்டத்திற்கு ரூ.3828 கோடி (19.14 சதவீதம்) முதன்முத லாக தமிழகத்தில் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியதாகும். உத்தப்புரத்தில் தலித் மக்களின் அரச மர வழிபாட்டிற் கும், பேருந்து நிழற்குடை அமைப்பதற் கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக அரசு நில ஆவணங் களை முறையாகப் பரிசீலித்தும், புகார் களை ஆய்வுக்குட்படுத்தியும் பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளிடம் ஒப்ப டைக்க வேண்டும். தலித் பெண்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை அமலாக்கு மாறும், பாலியல் வன்முறை களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநாடு வலியுறுத் திக் கேட்டுக்கொள்கிறது. புதிரை வண் ணார் சமூகத்திற்கு தாமத மின்றி சான் றிதழ் வழங்க வேண்டும்.

காங்கியனூரில் அடக்கு முறையை ஏவிவிட்ட காவல்துறை எஸ்.பி. அமல் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். நிலம், பட்டா, தொகுப்பு வீடு பராமரிப்பு ஆகிய தலித் வாழ்வுரிமைப் பிரச்சனைகளில் உடனடித் தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்துவதோடு, உழைப்பாளி மக்களைத் திரட்டிப் போரா டுவதெனவும் மாநாட் டில் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மாநாட்டின் முதல் நாள் சின்னப்பா பூங்கா அருகே தீண் டாமை எதிர்ப்பு கலைவிழா நடைபெற்றது.

No comments:

Post a Comment