வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு சாதிய முறையை தகர்த்து சமூகப் புரட்சி காண அனைவரையும் அணி திரட்டுவோம் புதுக்கோட்டை மாநாட்டில் பிரகாஷ்காரத் அறைகூவல்
புதுக்கோட்டை, மே 29-
தீண்டாமைக் கொடு மையின் அனைத்து வடிவங் களையும் அகற்ற வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநில மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ் வில் கலந்து கொண்டு பிர காஷ்காரத் பேசியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் நாட்டில் நிலவுகின்ற அனைத்து வகையான தீண் டாமைக் கொடுமைகள் மற்றும் சாதிய வேறுபாடு களை எதிர்த்து மகத்தான இயக்கங்கள் நடத்தியுள் ளது. இன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் பிறபகுதி யின் கவனத்தை ஈர்த்துள் ளது. சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக வும் இயக்கங்களை நடத்த அவர்களுக்கு உத்வேகத்தை தந்துள்ளது.
உத்தப்புரம் போராட்டத்திற்கு கிடைத்த பாராட்டு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமை சுவரை உடைத்தெறியும் போராட் டத்தை தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது. அப்போராட் டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த போராட்டத்தில் பங்கெ டுத்துவிட்டு நான் தில்லி சென்ற போது அன்றைய சமூக நலத்துறை மற்றும் சமூகநீதிக்கான மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற அவைத் தலைவருமான மீரா குமார் எனக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தார். உத்தப்புரம் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உளமார வாழ்த்துத் தெரி விப்பதாக அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார்.
சாதிய அமைப்பு முறை யில் தீண்டாமை என்பது ஒரு கொடுமையான வடிவ மாகும். சாதிய முறையை ஒழிப்பதற்கான முதல் கட் டமாக இப்போது நீங்கள், தீண்டாமையின் அனைத்து வடிவங்களையும் ஒழிப் பதற்கான பணியை மேற் கொண்டுள்ளீர்கள். சாதிய அமைப்பை ஒழிப்பது தான் தீண்டாமை கொடுமைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என சட்டமேதை அம்பேத்கர் கூறினார். ஒடுக்கப்படுகிற மக்களை மட்டும் சாதிய முறை கொச் சைப்படுத்தவில்லை. ஒடுக்கு முறை செய்பவர்களையும் கூட அது மனிதத் தன்மை யற்றவர்களாக மாற்றிவிடு கிறது. இதனால் தான் நம்பூ திரி குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதலில் மனிதத் தன்மை யுள்ளவர்களாக்கும் போராட் டத்தை தான் துவக்கியதாக அறிவித்தார். அப்படி ஆக்கு வதன் மூலம் தான் தீண் டாமைக்கொடுமைகளை கைவிட செய்யமுடியும் என்றார்.
எனவே தான் தீண் டாமை முடிவுக்கு வரவிரும் பும் அனைவரையும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தன்னகத்தே அரவணைக்க வேண்டும். அனைத்து சாதிய வேறு பாடுகளையும் ஒழிக்க வேண் டும் என்று விரும்புபவர் களையும், சாதிய ஒடுக்கு முறை தான் அனைத்து வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என கருது பவர்களையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியில் இணைத்து தீண் டாமைக்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிந்து விட் டது. அரசியல் சட்டம் அனைவரும் சமம் என்று பிரகடனப்படுத்து கிறது. ஆனாலும், சாதிய வேறு பாடுகள் இன்னும் தொலைந்தபாடில்லை. நிலப்பிரபுத்துவ சமுதாயத் தில்தான் சாதியம் வேர் பிடித்து வளரும் என்றும், முதலாளித்துவ வளர்ச்சி யில் அது தொலைந்து போகும் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இன்று நாட்டில் சாதியானது எல்லா வர்க் கங்களையும் கடந்து சமு தாயத்தில் நிலவிக்கொண்டி ருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிகப்பெரிய தொழிலதிபர்2 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் போடப்பட்ட எஃகு தொழிற்சாலையின் அதிபர்.கட்டப்பஞ்சாயத்தை ஆதரிக்கும் எம்.பிகாப் பஞ்சாயத்து எனச் சொல்லப்படும் சாதிய கட் டப்பஞ்சாயத்து முடிவு களை அவர் ஆதரிக்கிறார். ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும், பெண்ணும் திரு மணம் செய்து கொள்ளக் கூடாது என்ற சாதிய கட் டப்பஞ்சாயத்தை மீறுபவர் கள் மீறி, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கொலை செய்யப்படும் அள விற்கு நடைபெறும் கொடூ ரத்தை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரிக்கிறார் எனவே, வர்க்க பொருளா தார போராட்டத்துடன் சமூக ஒடுக்குமுறைக்கு எதி ரான போராட்டத்தையும் இணைந்தே நடத்த வேண் டியுள்ளது. அவ்வாறு செய் யாவிட்டால் புரட்சிக்கு சாத்தியமில்லை.
கம்யூனிஸ்ட்டுகள் பொரு ளாதார ஒடுக்கு முறை களுக்கு எதிராகத்தான் போராடுவார்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதி ராக போராடமாட்டார்கள் என்ற கருத்து நிலவி வருகி றது. காரல் மார்க்ஸ் புரட்சி என்று சொல்லும் போது, அதை பொருளாதார புரட்சி என்றோ, அரசியல் புரட்சி என்றோ சொல்ல வில்லை. அவர் எப்போதும் சமூகப் புரட்சி என்று தான் கூறுவார். இந்தியாவில் சாதிய முறையை ஒழித்துக் கட்டாமல் புரட்சி நடை பெறாது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பி னர்களாகிய நாம், சமூகப் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருப்போம் என் பது உண்மையானால், அனைத்து சமூக மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறோம் என்பதை நடைமுறையில் எடுத்துக்காட்ட வேண்டும்.
சமூக மாற்றத்திற்கான கருவி
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தீர்மானகர மான கருவியாக, உண்மை யில் தகுதிவாய்ந்த கருவியாக திகழும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இந்த மாநாடு ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாகும். மகத்தான நிகழ்வுகளை தமிழகத்தில் தோற்றுவிக்கப்போகிற மாநாடு என பிரகாஷ்காரத் கூறினார். அவரது ஆங்கில உரையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநி லப்பொதுச்செயலாளர் உ. வாசுகி தமிழாக்கம் செய்தார். மாநாட்டின் நிறைவாக பிர கடனம் வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment