Sunday, May 30, 2010

தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்’

தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை, மே 29-

சட்டப்பூர்வ அந்தஸ்தும், அதிகாரமும் கொண்ட மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தி யுள்ளது.

புதுக்கோட்டை மாநாட் டில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:

வன்கொடுமைகளும், தீண் டாமைக்கொடுமைகளும் அதிகமாக உள்ள மாநிலங் களில் தமிழகமும் ஒன்று. எனவே இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் முனைப் போடு மேற்கொள்ளப்பட வேண் டும். தமிழகத்தில் மாநில அளவிலான சட்டபூர்வமான மற்றும் அதிகாரம் கொண்ட எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தாமதமின்றி அமைக்கப்படு வதும் இப்பிரச்சனைகள் மீதான விரைவான தலையீட் டிற்கும், தீர்வுகளுக்கும் உதவக் கூடியதாகும். 2009 அக்டோபர் 27 கோட்டை நோக்கிய தலித் உரிமைப் பேரணியின்போது இக்கோரிக்கை உள்பட ஒரு கோரிக்கை சாசனம் தமிழக முதல்வரிடம் கொடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஏற்றுக்கொண்டும் இதுவரை அதற்கான முயற்சி எடுக்கப் படவில்லை என்று இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.மேலும் மாவட்ட அளவிலான விழிப் புணர்வு மற்றும் கண்காணிப் புக்குழுக்களில் சாதிய ஒடுக்கு முறை எதிர்ப்பு அமைப்பின் பிரதிநிதிகள், மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் இணைக் கப்படுவது அவசியமாகும்.

வன்கொடுமைகளுக்கு எதிரான முயற்சிகளை சட்ட ஒழுங்கிற்கு எதிரானவை என்று சித்தரிக்கும் போக்கும், ஆதிக்க சக்திகளின் சாதிய ரீதியிலான திரட்டலுக்கு உத வும் அணுகுமுறையும் அரசு நிர் வாகத்திடம் வெளிப்படுகிறது. தமிழக முதலமைச்சர் தலைமையிலான தீண்டாமை ஒழிப்புக்கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டபிறகு ஒரு முறைகூட கூடவில்லை என் பது தமிழக அரசின் அலட்சிய போக்கைக் காட்டுகிறது. தேசிய தலித் ஆணையம் இத னைச் சுட்டிக்காட்டி கண்டித் துள்ளது.

இவற்றின் விளைவாக தமி ழகம் முழுமையும் வன்கொடு மைகளும், தீண்டாமைகளும் நீக்கமற நிறைந்துள்ளன. தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி 22 மாவட்டங்களிலுள்ள 1845 கிராமங்களில் நடத்திய கள ஆய்வில் 82 வகையிலான தீண்டாமை வடிவங்களையும், 22 வகையிலான வன்கொடு மைகளையும் அம்பலமாக்கி யுள்ளது. வன்கொடுமைத் தடுப் புச்சட்டம் 1989 முறையாக அமலாக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கு மாறும், வன்கொடுமையைத் தூண்டுகிற ஆதிக்க சக்தி களை அடையாளம் கண்டு, வெளியேற்றம் உள்ளிட்ட நட வடிக்கைகள் மூலம் அக் கொடுமை நிகழாமல் செய லூக்கத்தோடு தடுக்க வேண் டுமெனவும் மாநாட்டில் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment