Monday, May 31, 2010

அனைத்து தலித் மக்களையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைக்கும் : ஜி.ராமகிருஷ்ணன்


புதுக்கோட்டை,மே30-

தமிழகத்தில் தீண்டா மையை ஒழிக்க ஆட்சிய திகாரம் கிடைத்தும் அதை திராவிட கட்சிகள் பயன் படுத்த தவறிவிட்டன. திமுக தலைவர் கலைஞர் 5 முறை முதலமைச்சர் பொறுப்பில் இருந்தும் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடி யவில்லை. ஆனால், இடது சாரிகள் ஆட்சியில் உள்ள 3 மாநிலங்களில் தீண்டா மைக்கொடுமைகள், போராட்டங்களின் மூலம் மட்டுமின்றி நிர்வாக நடை முறைகள் மூலம் ஒழிக்கப் பட்டுள்ளது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக் கோட்டையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் பேசியதாவது:

26
தலித் அமைப்புகள் உள்ளிட்ட 50-க்கும் மேற் பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன் னணி உருவாக்கப்பட் டுள்ளதற்கு வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள் கிறேன். இந்த அமைப்பின் நேரடி நடவடிக்கைகள் வெற்றி பெற்றிட எந்த தியாகத்தையும் செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருக்கிறது.

சாதிகளுக்கு வித்திட் டுள்ள சனாதனக்கூட்டம் தலித் மக்களுக்குள்ளேயே உட்பிரிவுகளை உருவாக்கி யுள்ளது. தலித் மக்கள் பல பிரிவுகளாக இருந்தாலும் தீண்டாமை ஒழிப்பு முன் னணி அனைத்து தலித் மக்க ளுக்கும் போராடும் ஒரே அமைப்பாக உள்ளது. தமி ழகத்தில் கீழத்தஞ்சையில் தலித் மக்களுக்கு இழைக் கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக பி.சீனிவாசராவ் நடத்திய போராட்டம் தீண் டாமைக்கொடுமையின் முதுகெலும்பை ஒடித்தது. அப்படிப்பட்ட பெருமை செங்கொடிக்கு மட்டும் உண்டு.

இடதுசாரிகள் ஆட்சி யில் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்க ளில் தீண்டாமைக்கொடு மைகள் முற்றிலும் ஒழிக் கப்பட்டுள்ளது. ஆட்சி யைப் பயன்படுத்தி தலித் மக்களின் தேவைகளை நிர் வாக ரீதியாகவும் அந்த ஆட் சிகள் பூர்த்தி செய்துள்ளன.

சாதிக்கொடுமைகளை ஒழிக்க அண்ணல் அம்பேத் கர் நடத்திய போராட்டங் களும், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங் களும், வர்க்கப் போராட் டத்துடன் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக பி.சீனிவாசராவ் நடத்திய போராட்டங்களின் அனுப வங்களை உள்வாங்கி செயல்படும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.

தமிழகத்தில் தந்தை பெரியாரின் பாதை எனப் பேசும் திராவிடக்கட்சிகள் கையில் 42 ஆண்டு காலமாக ஆட்சியதிகாரம் இருந்தா லும் தீண்டாமைக் கொடு மைகள் ஒழிக்கப்படவில்லை. திமுக தலைவர் கலைஞர் 5 முறை முதலமைச்சர் பொறுப் பில் இருந்தும் தீண்டா மைக் கொடுமையை ஒழிக்க முடியவில்லை என ஜி.ராம கிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment