THIS BLOG IS TO FIGHT AGAINST UNTOUCHABILITY AND OPPRESSION IN ANY FORM IN THE NAME OF CASTE
Tuesday, May 11, 2010
LETTER TO TN CM BY STATE SECRETARY OF CPI(M)
தூத்துக்குடி தலித் மக்களின் மயானத்தை அரசு மீட்டுத்தர வேண்டும் முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்
சென்னை, மே 10-
தூத்துக்குடி தாலுகா அய்யனடைப்பு ஊராட்சி சோரிஸ்புரம் தலித் மக்கள் இரண்டு தலைமுறைக்கு மேலாக பயன்படுத்திய மயானம் ஆக்கிரமிப்புக்கு உள் ளாகியிருக்கிறது. அதை மீட்டுத்தர வேண்டும் என தமிழக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் (22.04.10) எழுதியுள்ள கடித விபரம் வருமாறு:-
தூத்துக்குடி தாலுகா அய்யனடைப்பு ஊராட்சி சோரிஸ்புரம் பகுதியில் 170 தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதே ஊராட்சியைச் சேர்ந்த பாளையங் கோட்டை சாலையையொட்டிய பக்கிள் ஓடை புறம் போக்கு மற்றும் 75 ஆண்டுகளுக்கு முன்பு சோரிஸ் என்ப வர் தலித் மக்களின் மயானத்திற்காக வழங்கிய 1 ஏக்கர் (100 சென்ட்) இடத்தை 2 தலைமுறைகளுக்கு மேலாக இடுகாடாக சோரிஸ்புரம் தலித் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சோரிஸ் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு தாரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் தலித் மக்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த மேற்படி மயானத்தை ஆக்கிரமித்துள்ளனர். இந்த மயானத்தையும், இதையொட்டிய ஓடைப் புறம்போக்கையும் வளைத்து வேலி போட்டு அடைத்துள்ளனர். இதனால் மயானமும் அதற்குரிய பாதையும் அடைபட்டு, சோரிஸ்புரம் தலித் மக்கள் மயானம் பறிக்கப்பட்டுள்ள நிலையில் தவிக்கின் றனர். 70 ஆண்டுகளாக இம்மக்களின் பயன்பாட்டிலும், அனுபவத்திலும் இருந்த மயானம் இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பானது ஆகும்.
இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இம்மக்கள் புகார் செய்துள்ளனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூத்துக்குடி மாவட் டக்குழு சார்பாகவும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை இந்த மயானம் மீட்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 15.4.2010 அன்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி. சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் க.கனகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட அமைப்பாளர் பி.இசக்கிமுத்து மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சோரிஸ்புரம் பகுதிக்குச் சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்தை பார்வையிட்டதோடு அம்மக்களையும் சந்தித்துள்ளனர். சமூக-பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தட்டில் உள்ள சோரிஸ்புரம் தலித் மக்கள், மயான ஆக்கிரமிப்பு காரணமாக மிகுந்த வருத்தத் திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்தை மீட்டுத்தரும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது குறித்து எங்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் க.கனகராஜ் அவர்களும், தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆகவே தாங்கள் உடனடியாகத் தலையீடு செய்து, சோரிஸ்புரம் தலித் மக்களின் மயானத்தை ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து மீட்டுத்தருமாறு, அம்மக்களின் தொடர்ந்த பயன்பாட்டிற்கு அந்த இடத்தை உத்தரவாதம் செய்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment