Thursday, May 27, 2010

தலித்துகளும் நில உரிமையு

தலித்துகளும் நில உரிமையும்
-பொ. இசக்கிமுத்து

சமூகத்தில் பொருளாதார, கலாச்சார ரீதியாக அடிமட்டத்தில் உள்ள பிரிவு என்ற முறையில் ஒடுக் கப்பட்டவர்களாகவும் மனித உரிமை மறுக்கப்பட்டவர்களாக வும் தலித்துகள் உள்ளனர். இவர் கள் முன்னேற வேண்டும். இதர சமு தாய மக்களுடன் போட்டி போட்டு சமுதாய சவால்களை சமாளித்திட வேண்டும் என்ற நோக்கத்தில் பல் வேறு சலுகைகள் உள்ளன. இட ஒதுக்கீடு, வீடு கட்டும் திட்டங்கள் பஞ்சமர் நிலங்கள் என பல நலத் திட்டங்களும், இதனை செயல் படுத்த தனி அமைச்சகமும் மாநில- மத்திய அரசுகளில் ஏற்படுத்தப்பட் டுள்ளன. வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் உள்ளன. குடியிருப்புக் கான நிலம், மயானம், அதற்கான பாதை ஆகியவைகளை பொறுத்த மட்டும் விஷேச ஏற்பாடுகள் சட்டத் தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

தலித் மக்களும் அரசியல் சாசன பாதுகாப்பும்

இந்திய அரசியல் சாசனத்தில் பிரிவு 17-ல் தலித் மக்களுக்கான உரிமைகளை உத்தரவாதப்படுத்து கிறது. தீண்டாமை அறவே ஒழிக் கப்பட வழிவகை செய்யப்பட்டுள் ளது. இந்திய அரசியல் சாசனம் பிரிவு 46-ல் நலிவடைந்தவர்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவும், அவர்களை சமூக அநீதி மற்றும் எல்லா வகையான சுரண்டலில் இருந்து பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண் டுமென உள்ளது.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு - 23, கொத்தடிமை முறையினை தடை செய்துள்ளது. பெரும்பா லான கொத்தடிமைகள் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்க ளாக உள்ளதால் இந்தப்பிரிவின் கீழ் கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம்-1976, உருவாக்கப்பட்டு கொத்தடிமைகள் மறுவாழ்வுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட் டுள்ளன.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 14 வயதுக்கு குறைவான வர்கள் பெரும்பாலும் தொழிற்சா லைகளிலும் அபாயகரமான தொழில்களிலும் பணிபுரிகிறார் கள். இவர்களை பாதுகாக்க இந்திய அரசியல் சட்டம் பிரிவு 24 முன் வருகிறது. அதனடிப்படையில் குழந் தைத்தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட் டம்- 1986 உருவாக்கப்பட்டது.

பொதுமக்கள் வழிபடக்கூடிய இந்து சமயக் கோவில்களில் ஒரு பிரிவினர் மட்டும்தான் செல்ல முடியும் என்றில்லாமல், தாழ்த்தப் பட்ட மக்களும் செல்ல முடியும் என்பதை உத்தரவாதம் செய்திட அரசியல் சட்டப்பிரிவு 25 (2டீ) உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசியல் சாசனம் தலித் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பெற்றிட போரா டுவது மிகவும் அவசியமாகும்.

பஞ்சமி நிலம்

தலித் மக்களின் சமூக - பொருளாதார மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தொடர்ந்து தலித் மக்களுடைய அனுபவ பயன்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதாகும். அதை விற்கவும் முடியாது; வாங் கவும் முடியாது. ஆனால் தற்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் பெரும்பாலான இடங்களில் இந் நிலங்கள் தலித் மக்களின் கையில் இல்லை. அவைகள் அபகரிக்கப்பட் டுள்ளன. பஞ்சமி நிலங்கள் தலித் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட் டாலும் அல்லது விலைக்கு வாங் கப்பட்டாலும் அது சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அந்நிலங்கள் தலித் மக்களுக்கே சொந்தமான தாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலையீட்டின் பேரில் தமிழக அரசு அமைத்த நீதிபதி கே.பி. சிவ சுப்பிரமணியன் கமிஷன், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதா வூரில் தலித் மக்களிடம் இருந்து 53 ஏக்கர் நிலங்கள் விலைக்கு வாங் கப்பட்டது செல்லாது என சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதா கும். யாரிடமிருந்து அபகரிக்கப் பட்டதோ அவர்களுக்கே அந்த நிலம் சொந்தமானது என்ற மார்க் சிஸ்ட் கட்சியின் நிலையே சட்டப் படி சரியானதாகும்.

தலித் குடியிருப்பு மற்றும் மயானத்திற்கான நிலம்

தலித் மக்களுக்கு குடியிருப்பு வசதி, மயான வசதி, மயானத்தின் பாதை போன்ற வாழ்வாதார உரி மைகளை உத்தரவாதம் செய்வது, இந்திய அரசியல் சாசனம் பிரிவு 46-ன்படி அரசின் கடமையாகும். அதேசமயம் நிலத்தின் மீதான தனி நபர் உரிமை அரசியல் சாசன அடிப் படை உரிமை (குரனேயஅநவேயட சுiபாவள) ஆகாது என்பதால், தனி நபர்க ளுடைய நிலங்களை அரசு எடுத்து தலித் மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை. இதற்காக தமிழக அரசு ஆதிதிராவிடர் மக்கள் நலத்திட் டங்களுக்காக நிலங்களை ஆர்ஜி தம் செய்திட 1978-ம் ஆண்டு தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலத்திட்டத் திற்கான நில ஆர்ஜிதம் சட்டம் என்ற தனிச்சட்டத்தை உருவாக்கி யுள்ளது. 1894-ல் பொதுநோக்கத் திற்காக தனி நபர் நிலங்களை கையகப்படுத்த நிறைவேற்றப்பட்ட மத்திய சட்டமும் உள்ளது.

நீதிமன்றத்தின் பார்வையில்

இராமநாதபுரம் மாவட்டம், காரைக்குடி தாலுகா வேப்பங் குளத்தை சார்ந்த சு. அண்ணாமலை என்பவருக்கும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் இடையி லான வழக்கும் (றுஞ 1720ஃ1983) விழுப்புரம் மாவட்டம் தேனி கிரா மம் சு. கிருஷ்ணமூர்த்தி என்பவருக் கும் தமிழக அரசுக்கும் இடையி லான வழக்கும் (றுஞ 2199ஃ1983) முறையே 56 மற்றும் 86 சென்ட் நிலங்களை கையகப்படுத்தி தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளாகும். இந்த வழக்குகளை ஒரே வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன் றம் “நில ஆர்ஜிதத்தின் நோக்கம் என்பது ஆதிதிராவிட மக்களை உள்ளடக்கிய அரிசன மக்களின் மேம்பாடு மற்றும் நலனுக்கானது. இது தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறிய அறிவுரையை நிறைவேற்று வது போலாகும். மேலும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களுக்கு ஆரோக்கியமான வாழும் இடத்தை வழங்குவது மாகும். நிலச்சொந்தக்காரர்களுக்கு நில ஆர்ஜித சட்டம் 1978 பிரிவு 4 (1)ன் கீழ் முன் அறிவிப்பு வழங்கப் பட்டுள்ள நிலையில் நில உரிமையா ளர்களின் வழக்கு தள்ளுபடி செய் யப்படுகிறது” என தீர்ப்பளித் துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தமனூர் கிராமத்தில் 37 தலித் கிறிஸ்தவர்களுக்கான குடி யிருப்புகளுக்கு நிலம் ஆர்ஜிதம் செய் ததை எதிர்த்து ஆ. கோபால் கவுடர் தொடுத்த வழக்கில் (றுஞ 4997ஃ1999) நீதிபதி கே. சந்துரு “தலித் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற வியாக்கியானத்திற்குள் வராமையால் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்கான நில ஆர்ஜித சட்டம் 1978-ன் கீழ் இந்த நில ஆர்ஜிதம் செய்ய இயலாது என்றும் அதேசமயம் மத்திய சட்டம் 1894-ன் கீழ் நில ஆர்ஜித நடவடிக்கை மூலம் இந்த நிலங்களை எடுத்து தலித் கிறிஸ்தவர்களுக்கு வழங்குவதில் எந்தத்தடையும் இல்லை” என தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலன் களுக்கான நில ஆர்ஜித சட்டம் - 1978 மற்றும் மத்திய சட்டம் - 1894 ஆகியவற்றின் கீழ் தலித் மக்க ளுக்கான குடியிருப்புகள், மயானம் மற்றும் மயானத்திற்கான பாதை போன்ற தேவைகளுக்கு மேற்படி சட்டம் பிரிவு 4(1)ன் கீழ் நோட்டீஸ் கொடுத்து, தனி நபர்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்த அர சுக்கு முழு உரிமை உள்ளது. இதனை நீதிமன்றங்களும் அங்கீக ரித்துள்ளன. இதனடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர்கள் 1978-ம் ஆண்டு சட்டம் 4(1) பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கவும், மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் நலன்களுக்காக அந்த நிலங்களை ஆர்ஜிதம் செய்ய வும் அதிகாரமுள்ளது.

சட்டங்களும் நீதிமன்றங்களும் வழங்கியுள்ள இந்த உரிமைகளை பயன்படுத்துவோம். அரசியல் சாசன சரத்துகளின் அடிப்படை யில் தீண்டாமையை ஒழித்திடவும் தலித் மக்களின் வாழ்வாதார உரி மைகளுக்காகவும் மேம்பாட்டுக் காகவும் தொடர்ந்து போராடு வோம்.

>" class="inputSubmit" style="color: rgb(0, 0, 0); background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: rgb(255, 255, 255); border-top-color: rgb(153, 204, 255); border-right-color: rgb(153, 204, 255); border-bottom-color: rgb(153, 204, 255); border-left-color: rgb(153, 204, 255); border-top-width: 1px; border-top-style: solid; border-bottom-width: 1px; border-bottom-style: solid; border-left-width: 1px; border-left-style: solid; border-right-width: 1px; border-right-style: solid; font-family: Verdana, tahoma, Arial; font-size: 10px; font-weight: bold; width: 135px; background-position: initial initial; background-repeat: initial initial; ">

No comments:

Post a Comment