Tuesday, May 25, 2010

அவர்கள் எரித்தது கூடையை அல்ல, சமூக அவலத்தை...


-ஹர்ஷ் மேந்தர்

வருடங்கள் பல கடந்த பின்னரும் இழைக்கப்பட்ட கொடுமையும், அவமானமும், சமூக புறக்கணிப்பும் கண்ணில் நீராய்த் தளும்பி நிற்கிறது சரோஜ் பாலாவிற்கு. இந்திய அரசு மனிதக் கழிவை மனிதரே அகற்றுவ தைத் தடை செய்து 1993 ஆம் ஆண்டிலேயே சட்டம் இயற்றிய பின்னரும் தொடரும் இந்தச் சமூகக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தான் சரோஜ் . 13 வயதில் தன் வயதொத்த மற்ற பெண்களைப் போலவே, எடுப்பு கக்கூசில் (னசல டயவசiநேள) துர்நாற்றம் அடிக்கும் மலத்தைக் கைகளால் சுரண்டி எடுத்து மூங்கில் கூடை யில் நிறைத்துத் தலையில் சுமந்து பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் சென்று கொட்டு வதைத் தன் அன்றாட வேலையாகப் பழகிக் கொண்டாள்.

நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த சமயத் தில் ஒரு முறை கால் இடறிக் கீழே விழுந்த தில் கால் முறிவு ஏற்பட்டது. அந்த நிலையி லும் யாரும் அவளைத் தூக்கிவிட வரவில்லை. ஏனெனில், மனிதக் கழிவைத் தலையில் சுமக்கும் அவளைத் தூக்கினாலே தீட்டு, நாற் றம் ஒட்டிக் கொள்ளும் என்பதால் ஒரு புழு வை எடுப்பது போல், கழியால் நெம்பித் தூக்கி விட்டிருக்கின்றனர். கீழே விழுந்தபோது கூட காப்பாற்றக் கை கொடுக்காத தீண்டாமைக் கொடுமையை - சமூகப் புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்வதைவிட சாவதே மேல் இல் லையா என்று பழைய நினைவுகளின் வலி யோடு கண்கள் குளமாகக் கேட்கிறார் சரோஜ்.

இரண்டு வருடத்திற்கு முன்னால் கடை சியாக இந்த நரக வேதனையான வேலையை விட்டு வந்த போது சில வீடுகளில் ரூ.10/- ம் சில வீடுகளில் ரூ.20/- ம் கொடுக்கப்பட்டு வந்தது. மழைக்காலங்களில் மலத்தைத் தலையில் சுமந்து செல்லும்போது கூடை யின் இடுக்குகள் வழியாகத் தலையிலும் தோள்களிலும் மலம் வழிவதைச் சகித்துக் கொள்ள வேண்டும். வீட்டின் சொந்தக்காரர் கள் தங்களது மூக்கைப் புடவை முந்தானை யாலும், கைக்குட்டையாலும் மூடிக் கொள் ளும் போது அருவருப்பின் சுவடே தெரியாமல் இயந்திரத்தைப் போல சுமந்து செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட சாதியில் பிறந்ததற்காக ஏன் இந்த வேலையைச் செய்ய வேண்டும்? மத் திய அரசு இந்த மோசமான வன்கொடுமை யான வேலையை 1993ம் ஆண்டே தடை செய்த போதும் ஏன் இந்தக் கொடுமை இன் னும் தொடர்கிறது?

நம் நாட்டில் ஒரு சட்டம் சாதாரண மக்க ளின் உரிமையைப் பாதுகாப்பதாக இருந்தால் அதை மதிக்காமல், நடைமுறைப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது தான் காலங்காலமாக பின்பற்றப்படும் நடைமுறை. நிலச்சீர்திருத் தச் சட்டம், கொத்தடிமைமுறை ஒழிப்புச் சட் டம், குழந்தைத் தொழிலாளர்முறை தடுப்புச் சட்டம், அணிதிரட்டப்படாத மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமை பாதுகாக்கும் சட்டம், குறைந்த பட்சக் கூலி சட்டம் போன்ற வற்றைப் போலவே இந்த சட்டமும் முழுமை யாக நடைமுறைக்கு வராத ஒன்றாகவே உள்ளது. பெரும்பாலான மாநில அரசுகள் 2001ம் ஆண்டு வரை கூட சட்டமாக அறிவிக்கப்படாததோடு மட்டும் அல்லாமல் அதை நடைமுறைப்படுத்துவதற் கான விதிகளை வரையறுக்கவில்லை. இன் னும் சொல்லப் போனால் அரசே இம்மாதிரி யான எடுப்பு கக்கூசுகளில் சுத்தம் செய்ய பெண் ஊழியர்களை நியமனம் செய்வது ஒரு புறமும், மற்றொருபுறம் தங்கள் மாநிலத்தில் இந்த முறையே கிடையாது என்று மத்திய அர சுக்கு அறிக்கை அளிப்பது என்று இரட்டைத் தன்மையுடன் செயல்படுகிறது. இதன் உச்ச கட்டம் இந்திய நாட்டில் இந்தச் சட்டம் மத் திய அரசால் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டு கள் ஆன பின்னரும் ஒருவர் கூட இந்த சட் டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை என்பது தான்.

இந்திய அரசின் திட்டக்குழு கணக்கெ டுப்பின்படியே 1995ம் வருட நிலவரப்படி 6.4 லட்சம் மக்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். ஆனால் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தத் தொழிலில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர் என்பதும், அதில் 99 சதவீதம் பேர் தலித்துகள் என்பதும், அதிலும் 95 சதவீதம் பேர் பெண்களே என்பதும் அதிர்ச்சியளிக்கும் உண்மைகளாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து மனிதர்களுக் குமான சுயமரியாதை, புழுக்களை விடக் கேவ லமாக நடத்தப்படும் இந்த மக்களுக்கு மறுக் கப்படுவதை எதிர்த்து இந்தக் கொடுமைக்கு முடிவுகட்ட அமைக்கப்பட்டுள்ளது தான் சபாய் கர்மசாரி அந்தோலன் (ளுமுஹ) - இந்த அமைப்பு வில்சன் பெஜ்வாடா என்பவரால் நிறுவப்பட்டது. சிறிய வயதிலேயே தனது சொந்த மக்கள் படும் கொடுமையைக் கண்டு மனம் நொந்து அழுத இவருக்குக் கிடைத்த பதில்: "நாங்கள் குழந்தையிலிருந்தே இதற் குப் பழகிவிட்டோம். இந்தத் தொழில் செய்ய மறுத்தால் வயிற்றுக்குச் சாப்பாடு கிடைக் காது. நமது குழுந்தைகள் பட்டினியோடு தூங்க நேரிடும்" என்பது தான். மனம் தளராத வில்சன், பல்வேறு சமூகப்பின்னணி, சாதி களைச் சேர்ந்த அனுராதா கோன்கேபுடி, தீப்தி சுகுமார், மோசஸ் போன்ற ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்களோடு களத்தில் இறங்கி யுள்ளார்.

நாட்டின் 260 மாவட்டங்களில் பிரச்சாரம், மலம் சுமக்கும் கூடைகளை எரிப்பது, எடுப்பு கக்கூசுகளை உடைத்தெறிவது போன்ற வடி வங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்ற னர். அரசு அதிகாரிகள் எடுப்பு கக்கூசை உடைக்கும் போது ஆட்சேபித்தால், "உங்கள் அறிக்கையில் எடுப்பு கக்கூசே இல்லை என்று தானே குறிப்பிட்டுள்ளீர்கள். இல்லாத ஒன்றை எங்களால் எப்படி உடைக்க முடி யும்" என ஏளனமாகவும், காட்டமாகவும் பதி லடி கொடுக்கப்பட்டது.

மனிதாபிமானமற்ற இந்த நடைமுறையை ஒழித்துக்கட்ட இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்தத் தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக 2003ல், எஸ்.கே.ஏ. உச்சநீதிமன்றத்திற்கு சென்று வழக்குத் தொடுத்தது. 21 அமர்வுகளாக இந்த வழக்கின் விசாரணை நடந்தது. ஒவ்வொரு முறையும் (மாநில) அரசுகள் தத்தம் மாநிலத்தில் இப்ப டியான நடைமுறை அமலில் இல்லவே இல் லை என்று அறிக்கை தாக்கல் செய்தன. ஆனால் எஸ்.கே.ஏ., ஆணித்தரமான புள்ளிவிவரங்கள், அறிக்கைகள், புகைப்படங்களைக் கொண்டு இன்னமும் எடுப்புக் கக்கூசுகள் இருக்கவே செய்கின்றன என்பதையும், அவற்றைச் சுத் தம் செய்யும் பணியில் பெண்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர் என்பதையும் நிறுவி, அரசுக ளின் எல்லாப் பொய் பித்தலாட்ட அறிக்கை களையும் சுக்கு நூறாக்கினர். நூற்றாண்டுக ளாய் இந்த இழிதொழிலில் தள்ளபட்டிருந்த இந்தப் பகுதி மக்களிடையே பெருகிவரும் விழிப்புணர்ச்சி மற்றும் நாட்டின் தலைமை நீதிமன்றத்தின் தலையீடு ஏற்படுத்தியுள்ள நடுக்கம் ஆகியவற்றின் காரணமாக அசைந்து கொடுக்காத வணங்காமுடி மாநில அரசுகள் தரப்பிலும் தாக்கம் ஏற்பட்டது. அரியானா, பஞ் சாப், தில்லி, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர் நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இந்த இழிதொழில் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு விட்டது. அரியானா மாநிலத்தில், இந்தத் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய குற்றத் திற்காக 22 பேர் சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். அரியானா மாநிலத்தில் தான் நாட்டிலேயே இந்தக் கொடுமையைக் கண் டித்து தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.கே.ஏ.வின் இலக்கு 2010 இறுதிக் குள் எடுப்புக் கக்கூஸ் முறையை ஒழிப்பது தான். பத்துவருடத்திற்கு முன்னால் சாத்திய மில்லாதது என எண்ணியிருந்தது தொடர் முயற்சியால், பிரச்சாரத்தால், எழுச்சிமிகு போராட்டத்தால் இப்போது சாத்தியம் தான் என்ற நம்பிக்கையளித்திருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் இத்தகைய தீண் டாமை வன்கொடுமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் முதல் அமைப்பு எஸ்.கே.ஏ. தான் என்கிறார் சட்ட நிபுணரும், சமூக ஆர் வலருமான உஷா ராமநாதன். உணர்வுள்ள எவரும் இந்த அமைப்போடு கைகோர்க்க வேண்டும் என்ற அறைகூவலும் விடுக்கிறார் இவர். இந்த இயக்கத்துக்காரர்கள் மிகவும் சாத்வீகமான முறையில் இயங்குபவர்களாயி ருப்பதாலும், அதிகம் பேசப்படாதவர்களா யிருப்பதாலும் இவர்கள் சத்தியம், மனிதர் களுக்கிடையே பேதமில்லை என்ற உணர்வு, அஹிம்சா நெறியில் போராட்டம், அப்புறம் சட் டம் ஆகிய வித்தியாசமான ஆயுதங்களைக் கொண்டே நூற்றாண்டுக் கால ஒடுக்குமுறை யைத் துடைத்தெறிந்து படைத்துவரும் சாத னையைப் பெரும்பாலான மக்கள் அறிய மாட்டார்கள்.

எஞ்சியிருக்கிற சமூக அவலத்தை - எடுப்பு கக்கூசுகளை உடைத்தெறியும் உன் னதமான போராட்டத்தினை வழிநடத்துபவர் யார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன் னால் சமூக அவலத்தால், தீண்டாமைக் கொடுமையால் புழுவைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு, கண்ணீர் சிந்த வைக்கப்பட்ட சரோஜ் பாலா தான்.

தனது நான்கு குழந்தைகளையும் பள்ளி யில் படிக்க வைத்து, இரண்டு மகன்களை புகைப்படக் கலைஞர்களாகவும், மற்றொரு மகனை செல்போன் பழுதுபார்க்கும் கடை நடத்துபவராகவும், மகளை அழகுக் கலை நிபுணராகவும் உயர வைத்திருக்கிறார் இந்தச் சாதாரணப் பெண்மணி. அவரது பிள்ளைகள் தெருவிலே நடந்து செல்லும்போது அருவருப் புடன் யாரும் புடவைத் தலைப்பாலேயோ, கைக்குட்டையாலேயோ மூக்கை மூடிக் கொள்வதில்லை.

இப்படியொரு மாற்றத்தைத் தன் வாழ்நா ளில் பார்க்க முடியும் என்பதைக் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் சரோஜ் பாலா. அதைச் சாதிக்க முடிந்த ஓர் இயக்கத் தினைத் தலைமை தாங்குவோரில் ஒருவரா கத் தானும் இருப்போம் என்பதையும் தான்...

நன்றி: ‘தி ஹிண்டு’ நாளேடு - ஞாயிற்றுக்கிழமை

No comments:

Post a Comment