Sunday, May 30, 2010

ஜூன் 29ல் பட்டா கோரி ஆர்ப்பாட்டம் மலைவாழ் மக்கள் சங்கம் முடிவு

ஜூன் 29ல் பட்டா கோரி ஆர்ப்பாட்டம் மலைவாழ் மக்கள் சங்கம் முடிவு

சென்னை, மே 29-

வன உரிமைச் சட்டப்படி பட்டா கேட்டு மனுச் செய்துள்ள மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் மாநிலக்குழு கூட்டம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேட் டில் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் 27ஆம் தேதி நடைபெற் றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பழனிச்சாமி, மாநி லப் பொருளாளர் ஏ.அழகேசன் மற் றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கொல்லிமலை தலைவர் சின்னமுத்து அனைவரையும் வரவேற்றார். செயலாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

வன உரிமைச் சட்டம் - 2006 தமி ழகத்தில் இதுவரை நடைமுறைப்படுத் தப்படவில்லை. அரசை பலமுறை வற்புறுத்தியபிறகும் இப்போதுதான் 1147 பேருக்கு பட்டா வழங்கத் தயாராக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமி ழக அரசு தெரிவித்துள்ளது. இச் சட்டப் படி உரிமை கோரி சுமார் பதினோரா யிரம் மனுக்கள் அரசுக்கு வந்துள்ளதா கவும் தெரிவித்துள்ளது (இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த அலட்சியத்தோடும் மெத்தனப் போக் கோடும் தமிழக அரசு நடந்துகொள்வ தையே இது காட்டுகிறது). அரசுக்கு வந்த மனுக்கள்கூட முழுமையாகப் பரிசீலிக்கப்படாதது மிகுந்த கண்ட னத்திற்குரியது. இச் சட்டப்படி பயன டைய வேண்டிய அனைத்து பயனாளி களிடமும் மனுக்களைப் பெறவும், குறிப்பிட்ட கால வரையறைக்குள் மனுக் களைப் பரிசீலித்து பயனாளிகளை இறுதிப்படுத்தவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநிலக்குழு வற்புறுத்துகிறது.

ஆதிவாசிகள் மற்றும் பரம்பரை யாக வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு வன உரிமையும் நில உரிமையும் வழங்கி லட்சக்கணக்கான ஆதிவாசிகளையும் இதர சமூகத்தினையும் பாதுகாக்க தமி ழக அரசை வற்புறுத்தி 2010 ஜூன் மாதம் 29ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென்றும் மாநிலக்குழு தீர்மானிக்கிறது.

பொய் வழக்கு

தமிழக வனத்துறை அப்பாவி மலை வாழ் மக்கள் மீது பொய் வழக்குப் போடுவதைத் தனது வாடிக்கையாகச் செய்து கொண்டிருக்கிறது. ஆடு, மாடு களை மேய்ப்பதைத் தடுக்கும் நடவடிக் கையில் வனத்துறையினர் பல இடங் களில் ஈடுபட்டுள்ளது, அபராதம் விதிப்பது, பொய் வழக்கு போடுவது போன்ற செயல்கள் தற்போது நடந்து கொண்டுள்ளன. மலைவாழ் மக்களின் உரிமைக்காகப் போராடும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.பழனிசாமி மீது கருமந்துரை வனச் சரகரும், திரு மூர்த்திமலை செயலாளரும் மாநிலக் குழு உறுப்பினருமான செல்வத்தின் மீது வனத் துறையினரின் வற்புறுத்த லின் பேரில் வால்பாறை காவல் நிலை யத்தில் பொய் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. வனத்துறையினரின் இத் தகைய அராஜக நடவடிக்கையை மாநி லக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக அரசு உடன் பொய் வழக்கை திரும்பப் பெறுவதுடன் வழக்குப் போட்ட வனத்துறை அதி காரிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம். இத்துடன் மலைவாழ் மக்கள் ஆடு, மாடுகள் மேய்ப்பதைத் தடுக்கும் வனத் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திடக் கேட்டுக்கொள்கிறோம்.

குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடு களாக மாற்றும் திட்டத்திற்கு தமிழ் நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப் பட்டு வருகிறது. பட்டா இடத்தில் குடிசை வீடுகள் கட்டியிருந்தால் மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும் என அறிவித்துவிட்டு அனைத்து வகையான புறம்போக்குகளிலும் மலைப்பகுதிகளிலும் அனைவரையும் கணக்கெடுக்கும் மோசடியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது.

மலைப் பகுதிகளில் பட்டா வழங்க தடை விதித்து இருபது ஆண்டுகளாகி விட்டது. இந்தத் திட்டத்தில் பெரும் பகுதி பழங்குடி மக்கள் பயனடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வனப் பகுதிகளுக்கு மனைப் பட்டா வழங்க, விதிக்கப்பட் டுள்ள தடை உத்தரவை ரத்து செய்து அனைத்து வகையான புறம்போக்கு குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்கி பழங்குடியினருக்கு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை முன்னுரிமை அடிப் படையில் செயல்படுத்திட தமிழக அரசு முன்வர வேண்டுமென மாநிலக் குழு வற்புறுத்துகிறது.

சான்றிதழ்

பள்ளி - கல்லூரிகள் திறக்க இருக் கிற நிலையில் பழங்குடி இனச் சான்று தேதி விண்ணப்பித்து நிலுவையி லுள்ள அனைத்து மனுக்களுக்கும் இரண்டு வார காலத்திற்குள் சான்றிதழ் வழங்க அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும். வன உரிமைச் சட்டப்படி பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக் கும் இனச் சான்றிதழ் கட்டாயம் தேவை யாக இருக்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்துப் பழங்குடியின குடும்பங்களுக்கும் குறிப்பிட்ட கால வரையறை செய்து சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநிலக்குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

>" style="width: 125px;" class="inputSubmit" type="button">

No comments:

Post a Comment