Sunday, May 30, 2010

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு நிறைவு 50 ஆயிரம் பேர் அணிவகுப்பு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு நிறைவு 50 ஆயிரம் பேர் அணிவகுப்பு

புதுக்கோட்டை, மே 29-

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட் டையில் சனிக்கிழமை எழுச்சியுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி நடை பெற்ற மாபெரும் பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் அணிவகுத்தனர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப்பேர ணியை அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே.வரதராசன் துவக்கி வைத்தார். தீண்டாமை ஒழிப் போம்; சாதிய அமைப்பை தகர்ப்போம் என முழக்கமிட்டு, அம்பேத்கர் படங்களை ஏந்தி ஆயிரமாயிரமாய் திரண்டு வந்த பேரணியின் முகப்பில் கே.வரதராசன், பி.சம்பத், கே.சாமுவேல்ராஜ், .லாசர், என்.சீனிவாசன், பி.சண்முகம், என்.நன் மாறன் எம்எல்ஏ, ஜி.லதா எம்எல்ஏ எம்.சின்னத்துரை, எஸ்.திருநாவுக்கரசு, . தமிழ்ச்செல்வன், எஸ்.கண்ணன், என். அமிர்தம் உள்ளிட்ட தலைவர்கள் அணி வகுத்தனர்.

புதிய பேருந்து நிலையம், சந்தைப் பேட்டை, திலகர் திடல், பிருந்தாவனம் வழியாக சுமார் 6 கி.மீ. தூரம் நடைபெற்ற இப்பேரணி சின்னப்பா பூங்காவில் நிறைவு பெற்றது.

பிரகாஷ் காரத் வாழ்த்து

வழியில் வடக்கு ராஜவீதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், கே.வரதராசன், என்.வரத ராஜன், ஜி.ராமகிருஷ்ணன், பி.சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் பேரணியை பார்வையிட்டு, வாழ்த்து தெரிவித்தனர்.

நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் தலைவர்கள் உரையாற்றினர். புதுவை சப்தர் ஹஷ்மி குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:

Post a Comment