THIS BLOG IS TO FIGHT AGAINST UNTOUCHABILITY AND OPPRESSION IN ANY FORM IN THE NAME OF CASTE
Wednesday, July 28, 2010
புறக்கணிக்கப்படும் பழங்குடியினர் -
புறக்கணிக்கப்படும் பழங்குடியினர்
-பெ.சண்முகம்
அரசியல் சாசனம் 342ஆம் பிரிவின்படி நாடு முழுவதும் பட்டியல்படுத்தப்பட்ட பழங் குடியினர் 698 பிரிவினர். இவர்கள் அனை வரையும் ஒருங்கிணைக்கும் வகையில் தேசிய அளவில் “ஆதிவாசி உரிமைகளுக் கான தேசிய மேடை” (சூயவiடியேட ஞடயவகடிசஅ கடிச கூசiயெட சுiபாவள) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள் ளது. இது இந்திய பழங்குடி மக்களின் வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்ல லாம். ஆம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன் முயற்சியில் 2010 ஜுன் 12,13 ஆம் தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தான் அனைத்து பழங்குடி அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் இத் தகைய “பரந்த மேடை” அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள 8.50 கோடிக்கு மேற்பட்ட பழங்குடி மக்களின் முன்னேற்றத் திற்காக பாடுபடும் எந்தவொரு அமைப்பும் இதில் இணைந்து செயல்படலாம்.
விடுதலைப்போராட்டக் காலந்தொட்டு அகில இந்திய விவசாயிகள் சங்கத்துடன் இணைக்கப்பட்ட மாநில விவசாய சங்க அமைப்புகளின் சார்பில் பழங்குடி மக்களின் நில உரிமையையும், வனஉரிமையையும் பாது காப்பதற்காக எண்ணற்ற போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மே.வங்க மாநிலத்தில் சந்தால் இன மக்களின் எழுச்சி, மகாராஷ்டி ராவில் வார்லி இன மக்களின் எழுச்சி, ஆந் திரத்தில் தெலுங்கானா புரட்சி, பீகாரில் முண்டா இன மக்களின் எழுச்சி என வரலாற்றில் முத்திரை பதிக்கத்தக்க பல பெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இருப்பினும் ஆதிவாசி மக்களுக்கென்று தனி யான அமைப்பு துவக்கப்படவில்லை. முதன் முதலில் ஆதிவாசி மக்களுக்கென்று தனி அமைப்பு, தோழர்கள் தசரத்தேவ், சுதன்ய தேவ் வர்மா ஆகியோரால் திரிபுராவில் ‘கண முக்தி பரிஷத்’ என்ற பெயரில் 1948ம் ஆண்டு துவக்கப்பட்டது.
1992ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் “தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்”, 2000ஆம் ஆண்டில் கேரளமாநிலத்தில் ஆதிவாசி சேமசமிதி, ஆந்திர மாநிலத்தில் 2004ல் கிரிஜனா சங்கம், ஒரிசாவில் ஆதிவாசி மகாசபா, சத்தீஸ்கர் மாநிலத்தில் 2009ல் ஆதிவாசி ஏக்தா மகா சபா, ஜார்கண்ட் மாநிலத்தில் 2010ல் ஆதி வாசி அதிகார் மஞ்ச் என அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்த பாரம்பரியத்தின் பின்னணியில் தான் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இறுதியில் இன்று நாடு முழுவதும் மலை மற்றும் சமதளப்பகுதிகளில் வசிக்கும் கோடிக்கணக்கான ஆதிவாசி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் மீது போராட்ட நடவடிக்கையில் ஈடுபட அறைகூவல் விடுத்தது. ஜுலை மாதம் 25 முதல் 31 வரை ஒரு வார காலம் தேசம் முழுவதும் போராட் டங்கள் நடைபெறவுள்ளன.
உலகமயமாக்கல் கொள்கையை மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்துவ தின் விளைவாக, ஆதிவாசி மக்கள் அனுபவ நிலங்களிலிருந்தும், தங்கள் குடியிருப்புகளி லிருந்தும் வெளியேற்றப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுரங்கங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வளர்ச்சித் திட்டங் கள், வனச்சரணாலயங்கள் போன்றவற்றிற் காக ஆதிவாசி மக்களின் நிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன. 1894ஆம் ஆண்டைய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத் தங்கள் மேற்கொள்வதுடன், பாதிக்கப்படுபவர் களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கச்செய்யும் வகையில் ஷரத்துக்கள் உருவாக்கப்பட வேண்டும். பெரும்பாலான மாநில அரசுகள் நிலச்சீர்திருத்தம் என்பதை தங்களின் செயல்திட்டத்திலிருந்தே அகற்றிவிட்டன. மாறாக நிலக்குவியல் என்பது அதிக ரித்து வருவதை மாநாடு அம்பலப்படுத்தியது. வனஉரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டரை வருடங்கள் ஆன பிறகும் அச்சட்டம் முறையாக அமல்படுத்தப்பட வில்லை.
வனஉரிமைச்சட்டத்தின் படி உரிமை கோரி நாடு முழுவதும் 2010 மார்ச் 31 வரை 27 லட்சத்து 44 ஆயிரம் மனுக்கள் அரசுக்கு வந் துள்ளது. இதில் 7 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் பட்டாக் கள் திரிபுரா மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் 31 ஆயிரம் பட்டாக் கள் தயாராக இருக்கிறது என விபரங்கள் தெரிவிக்கின்றன. 8.50 கோடி பழங்குடி மக்கள் உள்ள நாட்டில் வெறும் 27 லட்சம் பேர் தான் உரிமை கோரியுள்ளனர் என்பதிலிருந்தே மக் களிடையே இச்சட்டம் குறித்த விழிப்புணர் வின்மையும், ஆட்சியாளர்களின் அலட்சிய மும் வெளிப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வந்த மனுக்களில் 20 லட்சம் மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் குப்பையிலே போடப்பட் டிருப்பது வேதனையான உண்மை. தமிழ்நாட் டில் 16 ஆயிரம் மனுக்கள் மட்டுமே வந்துள்ள தாகவும் இதில் 1147 பேருக்கு பட்டா வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆதிவாசி மக்களை ஏமாற்றும் ஆட் சியாளர்களின் இத்தகைய அணுகுமுறைக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழுச் செய்ய மாநாடு முடிவு செய்தது.
அதே போல், பழங்குடியினர் பட்டியலில் பல்வேறு இனங்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதிலுமிருந்து மத்திய அரசுக்கு பல்வேறு மாநில அரசுகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத் தகைய வேண்டுகோள் மீது மிகுந்த அலட்சி யத்துடனும், இதற்கான வழிமுறைகள் மிகக் கடினமானதாகவும் உள்ளது. இத்தகைய பரிந்துரைகள் மீது மத்திய அரசு முடிவெடுக்க காலதாமதம் செய்வதால் பல லட்சக்கணக் கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘ரியான்’ என்கிற பழங்குடியினம் திரிபுரா வில் பழங்குடி பட்டியலில் உள்ளனர். அசா மில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வைக் கப்பட்டுள்ளனர். ‘லம்பாடி’ என்ற இனம் ஆந்திரா, கர்நாடகாவில் பழங்குடி பட்டியலி லும், தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பட்டியலிலும் உள்ளனர். இதுபோல் பல மாநிலங்களிலும் உள்ளது. தமிழ்நாட்டிலி ருந்து ஈரோடு மாவட்ட மலையாளி, குறவன் இனத்தின் உட்பிரிவினர், குறுமன்ஸ் இனத் தின் உட்பிரிவினர், நரிக்குறவர் ஆகிய இனத் தவரை பழங்குடி பட்டியலில் சேர்க்க தமிழக அரசு பரிந்துரைத்து மத்திய அரசு கிடப்பிலே போடப்பட்டிருப்பது குறித்து தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே போல், மேற்கு வங்கம், ஒரிசா, சத்தீஸ் கர், மகாராஷ் டிரா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து அனுப்பப்பட்ட பரிந் துரைகளையும் ஏற்காமல் மத்திய அரசு காலங் கடத்தி வருகிறது. எனவே, இத்தகைய பரிந்து ரைகள் மீது பரிசீலித்து முடிவெடுக்க, கால வரையறையுடன் கூடிய தேசிய ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று மத்திய அரசை மாநாடு வலியுறுத்தியது.
இது மட்டுமல்லாமல், பழங்குடியினருக் குரிய பணியிடங்கள் அனைத்துத் துறைகளி லும் அனைத்துமட்ட பதவிகளிலும் காலியாக பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் என எதுவும் இதில் விதிவிலக்கல்ல. பல துறைகளும், தொழில்களும் தனியார் மயமாக் கப்படுவதால் இப்பிரிவினர்க்குரிய இடஒதுக் கீட்டு பலன்கள் மேலும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தனியார்துறையிலும் பழங் குடியினர்க்கு இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் மத்திய அரசு சட்டமியற்ற வேண் டும். காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்ட அமலாக்கம் பாராட்டும்படியாக இல் லை என்பது நாம் அறிந்ததே. ஆதிவாசி மக் கள் வசிக்கும் பகுதிகளில் இன்னும் மோசம். வருடத்திற்கு 100 நாட்கள் என்று சட்டம் சொன்னாலும் எந்தவொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலை தருவதில்லை. சட்டக் கூலி 100 ரூபாயை சதி செய்து குறைக்கும் நடவடிக்கை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
பழங்குடி மக்களில் கற்றவர் விகிதம் மிகமிகக் குறைவு என்பதை அனைத்து ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன. இதில் மாற்றம் காண பழங்குடியின குழந்தைகளுக் கென்று உண்டு - உறைவிடப் பள்ளிகளை அரசு அமைத்துள்ளது. ஆனால் அப்பள்ளிக ளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாகவே காலியாக உள்ளன. பணியிலிருக்கும் ஆசிரி யர்களும் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில் லை. உதாரணத்திற்கு, சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அரசு உண்டு-உறைவிடப் பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணியிடம் காலி. கொல்லிமலையில் செம் மேட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 12 ஆசிரியர் பணியிடங்கள் காலி. இதுதான் தமிழ கம் முழுவதும் மலைப்பகுதிகளில் உள்ள பள் ளிகளின் லட்சணம். குறைந்தபட்ச தேர்ச்சி யை உறுதிப்படுத்தவே இந்தப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவது அவசியம்.
இப்படி பழங்குடி மக்களில் சகல பகுதி யினரின் கோரிக்கைகளும் ஜுலை இயக்கத் தில் முன் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஜுலை 25 துவங்கி 31ந் தேதி வரை, முப் பதுக்கும் மேற்பட்ட மையங்களில் “தொடர் முழக்கப்போராட்டம்” நடைபெறவுள்ளது. ஆதிவாசி மக்களின் அடிப்படை வாழ்வா தாரப் பிரச்சனைகளை முன்னிறுத்தி நடை பெறவிருக்கும் இவ்வியக்கத்தில் ஆயிரக் கணக்கானோரை அணிதிரளச் செய்வோம். ஆதிவாசி மக்களை புறக்கணிக்கும் ஆட்சியா ளர்களுக்கு பாடம் புகட்டுவோம்.
No comments:
Post a Comment