டாக்டர் அம்பேத்கர் சட்டஉதவி மையம் கோவையில் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்
கோவை, ஜூலை 17-
தலித் மக்களின் உரிமை களுக்காகப் போராடும் வகையில் கோவையில் துவங்கப்பட்டுள்ள டாக் டர். அம்பேத்கர் சட்ட உதவி மையம் செயல்படும் என்று அந்த மையத்தின் துவக்க விழாவில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்ட னர். இந்த சட்ட மையத் தினை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்துப் பேசினார்.
பல்வேறு தீண்டாமை மற்றும் வன்கொடுமைக ளுக்கு ஆளாகும் தலித் மக்க ளுக்கு நீதி கிடைத்திட உதவி செய்யும் நோக்கத் துடன் சட்ட உதவி மையங் களைத் துவக்குவது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்தது.
சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்க ளில் இந்த மையம் துவக் குவதாக முடிவெடுக்கப் பட்டது.
அந்த முடிவை அமல் படுத்துவதன் முதல் கட்ட மாக கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து டாக்டர் அம்பேத்கர் சட்ட உதவி மையம் துவங்கப்பட் டுள்ளது. இதன் துவக்க விழா ஜூலை 16 அன்று கோவையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் வி.சுந்தர மூர்த்தி தலைமை தாங்கி னார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.வெண்மணி வரவேற்றுப் பேசினார். சட்ட உதவி மையத்தின் நோக்கத்தை விளக்கி தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவ ஞானம் பேசினார்.
மையத்தின் பணி சிறப் பாக நடைபெற கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்ன ணியின் துணைத்தலைவர் கோவை ரவிக்குமார், ஆதித் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலா ளர் இளமதி, கோவை பார் கவுன்சிலின் செயலாளர் மு.ஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, தூத் துக்குடி மாவட்டச் செய லாளர் க.கனகராஜ் ஆகி யோர் விழாவில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் வி. பெருமாள் நன்றி கூறினார்.
தென் மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு, இந்தியன் வங்கி ஊழியர் சங்கம், மும்பை விழித்தெழு இயக்கம், நாக் பூர் இந்திய அமைதி மையம் மற்றும் விழுப்புரம் அம் பேத்கர் பாடசாலை ஆகிய அமைப்புகள் விழாவை வாழ்த்தி செய்திகள் அனுப் பியிருந்தன.
No comments:
Post a Comment