சென்னை, ஜூலை 25 -
இன்றைய உலக மய மாக்கல், தனியார் மயமா க்கல் பின்னணியோடு இணைத்தே தலித், பழங் குடியினர் மற்றும் சிறு பான்மையினர் பிரச்சனை களைப் பார்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார். அனைத்து ஜனநாயக சக்திகளும் தெரு வில் இறங்கி போராடி னால்தான், தலித் பிரச்சனை கள் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கும் என்றார் அவர்.
சென்னை பல்கலைக் கழகத்தின் குற்றவியல் துறை யும், சமூக சிந்தனைக்கான அறக்கட்டளையும் இணை ந்து சனிக்கிழமையன்று ‘தலித் பிரச்சனைகள்’ தொடர்பான ஒரு கலந் துரையாடலை நடத்தின. இதனைத் தொடங்கி வைத்துப் பேசிய நாடாளு மன்ற மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.ரங்கராஜன், அரசமைப்பு சாசனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள தலித் மக்களுக்கான சட் டங்கள் நேர்மையாக அம லாக்கப்படுவதில்லை என்று விமர்சித்தார்.
உத்தப்புரம் அனுபவங் களை நினைவுகூர்ந்த அவர், மாவட்ட அதிகாரிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்த வர்களாக இருந்த போதி லும் அந்த ஊரில் தலித் மக் களும் பயன்படுத்துவதற் காக ஒரு பேருந்து நிழற் குடை கட்ட முடியவில்லை என்று சுட்டிக்காட்டினார். ஆதிக்க சாதியினரின் தலை யீட்டால் தலித் மக்களின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. உரிமைகளுக்காகப் போ ராடுகிற தலித்துக்கள்தான் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுகிறார்கள் என் றும் அவர் கூறினார்.
அனைத்துத் தரப்பு மக்க ளும் அங்கம் வகிக்கிற தீண் டாமை ஒழிப்பு முன்னணி யும் அருந்ததியர் அமைப்பு களும் உறுதியாகப் போரா டியதன் பலனாகவே அந்த மக்களுக்கு தமிழக அரசு மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அறிவிக்கச் செய்ய முடிந்தது என்றார்.
நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலே பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார்மயமாக்கு கிறது. ரயில்வேயில் சுமார் ஒருலட்சம் காலிப் பணி யிடங்கள் உள்ளன. அவற் றில் சுமார் 70 ஆயிரம் காலியிடங்கள் ரயில் பாது காப்பு பணிகள் தொடர் பானவை. தொடரும் ரயில் விபத்துகளின் பின்ன ணியில், இவ்வாறு காலி யிடங்களை நிரப்ப மறுக் கும் மத்திய அரசின் கொள் கையும் இருக்கிறது.
பொதுத்துறை நிறுவ னங்களில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அந்த நிறு வனங்கள் தனியார் மயமாக் கப்படும் நிலையில் இட ஒதுக்கீடு என்பதே அர்த்த மற்றதாகிவிடுகிறது.
தலித் மக்கள் படித்து, பட்டம் பெற்று உரிய தகு திகள் பெற்றிருந்தும் பொதுத் துறை நிறுவனங்களில் நிர் வாக இயக்குநர் போன்ற உயர் பதவிகளில் அவர் களை காணமுடியவில்லை. பொதுத்துறை நிறுவனங் களிலேயே இதுதான் நிலைமை என்றால் தனியார் துறையிலும் எந்த அள விற்கு தலித்துக்கள் புறக் கணிக்கப்படுவார்கள் என் பதை கூறவேண்டியதில்லை. எனவேதான் இடதுசாரிகள் தனியார் துறையிலும், பன் னாட்டு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு தேவை என வலியுறுத்துகிறார்கள் என்றார்.
தேசிய தாழ்த்தப்பட் டோர் மற்றும் பழங்கு டியினர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் சி.செல்லப்பன் பேசுகை யில், ஆணையத்திற்கும் அமைச்சகத்திற்கும் இடை யே ஒருங்கிணைப்பு இல் லை என்று சுட்டிக்காட்டி னார். வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் வருமானால் ஆணையம் அதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை மட்டுமே செய்ய இயலும். நடவடிக்கை எடுக்க வைக்கும் அதிகாரம் ஆணை யத்துக்கு இல்லை என்றும் டி.கே.ஆர் கூறிப்பிட்டார்.
அமெரிக்காவில் உள்ள இல்லினோஸ் பல்கலைக் கழக குற்றவியல் நீதித்துறை பேராசிரியர் சேஷ கேத்தி னேனி தமது உரையில், தலித் மக்களின் உரிமைகள் மீறப்படுவது என்பது சர்வதேச மனித உரிமை மீறல் குற்றத்தோடு தொடர் புடையதுதான் என்றார். ஐக்கிய நாடு கள் சபை போன்ற பன்னாட்டு மேடைகளில்இப்பிரச்ச னைகள் எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்னை பல்கலைக் கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் எம். தங்கராஜ் பேசுகையில், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடும் வன்கொடுமை தடுப்புச்சட்டமும் சிறப்பு உட்கூறு திட்டமும் கறாராக அமலாக்கப்பட்டால்தான், அரசின் கொள்கைகளால் தலித் மக்களுக்கு பலன் கிடைத்துள்ளது என்று கூற முடியும் என்றார்.
விவாதங்களை அறக்கட் டளையின் தலைவர் என். லலிதா ஒருங்கிணைத்தார்.
No comments:
Post a Comment