உத்தப்புரம் தலித் மக்கள் உண்ணாவிரதம் காவல்துறை தாக்குதலுக்கு கண்டனம்
மதுரை, ஜூன் 21-
மதுரை மாவட்டம் உத்தப் புரத்தில் காவல்துறையின ரின் தடியடி தாக்குதலைக் கண்டித்து தலித் மக்கள் உண்ணாவிரதப் போராட் டம் நடத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுவினரும் தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலைவர்களும் பங் கேற்றனர்.
காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்தும், நிழற்குடை அமைக்க வேண்டும். அரசு திறந்து விட்ட பாதையில் வாகனங் கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தப்புரம் தலித் மக்கள் கைக்குழந்தை களுடன் திங்களன்று காலை 9மணிக்கு உண்ணா விரதப் போராட்டத்தை துவக்கினர்.
அரசு திறந்துவிட்ட பாதையில் ஆட்டோவோ, விவசாய பொருட்களை ஏற்றிச்செல்லக்கூடிய டிராக் டரோ செல்ல அனுமதிப்ப தில்லை என குறைகூறிய மக் கள். வாகனங்கள் செல் வதை காவல்துறையினர் தடுப்பதாக குற்றம் சாட் டினர்.
மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப் பாளர் மனோகரும் கைது நடவடிக்கை இருக்காது என உறுதியளித்தபின்ன ரும் கைது நடவடிக்கையை காவல்துறை தொடர்கிறது. அப்பாவிகள் காவல்துறை யின் மிரட்டலுக்கு உள்ளா கின்றனர் எனக்கூறினர்.
அரசு திறந்துவிட்ட பாதையில் வாகனங்கள் செல்வதற்கு தடையில்லை. மக்கள் சுதந்திரமாகச் செல் கின்றனர் என முதல்வர் கரு ணாநிதி கூறியுள்ளார். ஆனால் முதல்வரின் அறி விப்பு நடைமுறைப் படுத்த வில்லை என்பதை திங்க ளன்று உத்தப்புரம் சென்று நிலைமைகளை ஆய்வு செய்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்ற, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சட்டமன் றக்குழுவினரும், தீண்டா மை ஒழிப்பு முன்னணித் தலைவர்களும் கண்கூடா கக் கண்டனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேசிய பேரையூர் தாசில்தாரும், காவல்துறை சார்பில் துணை கண்கா ணிப்பாளர் கனகராஜூம் அரசு திறந்துவிட்ட பாதை யில் வாகனங்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை எனக் கூறி னர். ஆனால் மக்களோ அதி காரிகள் தவறான தகவல் களை தெரிவிப்பதாக குற் றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து தலைவர்கள், அரசு திறந்து விட்ட பாதையில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச்செல்வதற்கு முடிவு செய்தனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறை யும் முற்றாக மறுத்துவிட் டது. அரசு திறந்து விட்ட பாதையில் வாகனங்கள் செல்வதாக நீங்கள் (அதிகா ரிகள்) தானே கூறினீர்கள். இப்போது ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்பதற்கு அதிகாரிகள் சரியான பதி லை அளிக்க முடியாமல் திணறினார்கள்.
இதையடுத்து தலித் மக்க ளுடன் அரசு திறந்துவிட்ட பாதையில் வாகனங்களை ஓட்டிச்செல்வது என தலை வர்கள் முடிவு செய்து வாக னங்களுடன் புறப்பட்ட னர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத் தினர். தலித்மக்களை சந் திக்க வந்த சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர்கள் செம் மொழி மாநாட்டில் பங்கேற் பதற்காகச் சென்றுள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜை தொடர்பு கொண்டு பேசினர். ஆட்சி யரோ, செம்மொழி மாநாடு முடிந்து 28ம் தேதி வந்துவிடு வேன். வந்தவுடன் உத்தப் புரத்திற்கு நேரடியாகச் சென்று பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்க்கிறேன் என்றார்.
அரசு திறந்துவிட்ட பாதையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மாலை 2.30 மணிக்கு அனுமதியளித் தார். பின்னர் ஓர் ஆட் டோவை வரவழைத்து, காவல்துறை ஜீப் முன்னால் செல்ல, ஆட்டோவில் ஜந்தாறு பெண்கள் சென்றனர். இவர் களது ஆட்டோவைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு காவல்துறையினர் சென் றனர்.
பேரையூர் தாசில்தார், சாக்கடையை ஊருக்கு வெளியே கொண்டு செல்வ தற்கு பணம் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அப்பணிகள் துவங்குமெனவும் உறுதி யளித்தார்.
ஆட்சியர் அளித்த வாக் குறுதிகளை தலித் மக்களி டம் தலைவர்கள் எடுத்துக் கூறினர். உத்தப்புரம் தலித் மக்களின் கோரிக்கைகளுக் காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தீண்டா மை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து உறுதியான போராட்டங்களை நடத் தும் என உறுதியளித்தனர். இதையடுத்து மாலை 3 மணிக்கு மக்கள் தங்களது உண்ணாவிரதப்போராட் டத்தை விலக்கிக்கொண்டனர்.
=====================================================================================
உத்தப்புரம் : சிபிஎம் சட்டமன்றக்குழு ஆய்வு
மதுரை, ஜூன் 21-
உத்தப்புரத்தில் காவல்துறை நடத்திய தடியடி தாக்குதலில் பாதிக் கப்பட்ட தலித் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக்குழுவினர் திங்களன்று காலை சந்தித்தனர்.
உத்தப்புரத்தில் பிரச்சனைக்குரிய சாக்கடையை தோண்டி தலித் மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதியில் போட்டதையடுத்து ஏற் பட்ட சம்பவத்தில் தலித்மக்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத் தியது. தலித்மக்கள் மூன்று பேர் காயமடைந்தனர். மேலும் தலித்மக்கள் பலர் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு பொய்வழக்குகளை பதிவு செய்து காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.
மேலும் காவல்துறையினர் இரவு நேரத்தில் ஆண்களையும்-பெண்களையும் வீடு புகுந்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஆண்கள் யாரும் ஊரில் இல்லாத நிலை உள்ளது. பெண்கள் மட்டுமே கிராமத்தில் உள்ளனர். தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் கடைகள் முற்றாக அடைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் தடியடி சம்பவத்தால் பாதிக் கப்பட்ட தலித் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக்குழுத்தலைவர் கே.பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் என். நன்மாறன், எஸ்.கே.மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாவட்டச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மதுரை மாவட்ட நிர்வாகிகள் எம்.தங்கராசு, எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.ராஜகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் திங்களன்று சந்தித்து ஆறுதல் கூறி நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத்தலைவர் பி.சம்பத், உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும், அரசு திறந்துவிட்ட பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும், அரசமர வழிபாட்டு உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஏற்கெனவே தமிழக அரசிடமும், மதுரை மாவட்ட நிர்வாகத்திடமும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இன்றுவரை நிழல் குடை அமைக்கவில்லை, அரசு திறந்துவிட்ட பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சாக்கடை பிரச்சனைக்குக்கூட தீர்வு காணப்படவில்லை என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் கே.பாலபாரதி கூறு கையில், உத்தப்புரத்தில் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி குறித் தும், மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாதது குறித்தும் தமிழக முதல் வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.
No comments:
Post a Comment