Tuesday, June 1, 2010

மின்னாத்தூரில் ஏற்பட்ட மனமாற்றம் தலித்துகளுக்கு பொது கிளாசில் டீ



புதுக்கோட்டை மாவட்டம் மின்னாத்தூரில் கடந்த இரண்டு நாட்களாக தலித்துகளுக்கும் பொதுக்கிளாசில் டீ வழங்கப்படு கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் ஏற்பட்ட இந்த மன மாற்றம் புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநாட்டின் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தி லுள்ள மின்னாத்தூரில் டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறை இருந்து வந்தது. இங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீட்டால், தலித்துகள் தப்படிப்பது, பிணம் எரிப்பது போன்ற அடிமை வேலை செய்யும் முறை முற்றாக ஒழிக்கப்பட்டது. இங்குள்ள பெரியாண்டவர் கோவிலில் தலித்துகளும் சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2004, டிசம்பர் 12ம் தேதி ஆலய நுழைவுப்போராட்டம் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தலித்துகள் நுழைந்த கோவிலுக்குள் நாங்கள் நுழைய மாட்டோம் என்று கூறி அங்குள்ள சாதி ஆதிக்க சக்திகள் இதுநாள்வரை கோவிலைப் பூட்டியே வைத்துள்ளனர். டீக்கடைகளிலும் இரட்டைக்குவளை முறை நீடித்தே வந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு மாநாடு தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட இதர பிற்படுத்தப் பட்ட சமூகத்தினரிடமும் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அனைத்து சமூகத்திலுமுள்ள நல்ல எண்ணம் படைத்தோர், முற் போக்கு சிந்தனையாளர்கள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தது.

இப்படிப்பட்ட தீர்க்கமான முன்மொழிதலுக்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது. இனிமேல் எனது கடையில் அனை வருக்கும் சமமாகவே டீ வழங்கப்படும் என்ற தகவலை சம்பந்தப் பட்ட கடை உரிமையாளரே மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் எம்.முருகேசனை அழைத்து தெரிவித்துள்ளார்.

இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழுவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் முழு மனதுடன் வர வேற்றுள்ளது. களப்போராட்டங்களுக்கு மத்தியில், இத்தகைய முயற்சிகளும் தொடரும் எனவும் அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment