Tuesday, June 15, 2010

பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டும் -தே. இலட்சுமணன்


அண்மையில், சரியாகச் சொல்ல வேண்டுமானால், 5.4.2010 அன்று “மெட் ராஸ்” உயர்நீதிமன்றத்தில் டிவிஷனல் பெஞ்ச் ஓர் அற்புதமான தீர்ப்பு ஒன்றை வழங் கியது. பஞ்சமி நிலம் பறிக்கப்பட்ட - சட்டத் துக்குப் புறம்பாக அபகரிக்கப்பட்ட அந்தப் பஞ்சமி நிலம் பற்றிய தீர்ப்புதான் அது.

எப்போதாவது சில நேரங்களில் ஏழை எளிய மக்களின், சமுதாயத்தின் கடைக் கோடி மக்களின் மறுக்கப்பட்ட நியாயங்கள் மறுபிறவி எடுப்பது என்பது நடந்து வருகின் றன. அந்த வகையில்தான் பறிக்கப்பட்ட பஞ் சமி நிலங்களை மீண்டும் அவர்களுக்கே திருப்பித் தர வேண்டும எனப் பாராட்டப்படும் படியான ஒரு தீர்ப்பு பரபரப்பாக வந்தது.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இதற்கு அடிகோலப்பட்டது என்பது இன்னும் ஒரு வியப்பான செய்தி. அதிலும் தமிழகத்திலேயே செங்கற்பட்டு மாவட்டத்தில்தான் இந்த ஏற்பாடு இருந் திருக்கிறது. வேறு எந்த மாவட்டத்திலும், எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட ஏற்பாடு இருந்ததாகத் தெரியவில்லை.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அன்று எப்படி ஜமீன்தார்களின், மிட்டாதார் களின் கொட்டம் கொடி கட்டிப் பறந்ததோ, அதேபோல் தமிழகத்தில் அதற்கு அடுத்து செங்கற்பட்டு மாவட்டத்தில் தான் ஜமீன்தார் களின் அட்டகாசங்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே செங்கற்பட்டு மாவட்டத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவராக 1892-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆங்கிலேயர் ஒருவர், மக்க ளின் நலன்களுக்காக எடுத்த முயற்சிகள் அற்புதமானவை. அவர் 1875 ஆம் ஆண் டிலேயே வேலை நியமனம் பெற்று முதன் முதலில் வட ஆற்காடு மாவட்டத்தில்தான் அசிஸ்டன்ட் கலெக்டராக - மாஜிஸ்ட் ரேட்டாக பொறுப்பேற்றார்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் பொறுப் பேற்ற பிறகு அங்கு அடிமைகள் போல், மிகக் கேவலமாக வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமைகளைப் பற்றி அரிய ஆய்வுகள் நடத்தினார். ஏராளமான விவரங்களைச் சேக ரித்தார். இந்தியாவை சுரண்ட வந்த ஆங்கி லேயர் ஆட்சியில் இப்படியும் ஓர் அதிசய மனிதர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் நில விய அடிமை முறை ஒழிக்கப்பட்டு, சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மிராசுதார்களி டம், நிலச்சுவான்தாரர்களிடம் செங்கற்பட்டு மாவட்டத்தில் “படியாள்” என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைகளாய் பணி புரிவதைக் கண்டார்.

முப்பாட்டன், பாட்டன், தகப்பன், மகன், பேரன் என வழிவழியாக படியாளாக பணிபுரி வதைக் கண்டார். அந்தப் படியாட்களின் குடும்பங்கள் பூராவும் அந்த ஜமீன் கீழ்தான் பணிபுரிந்துக் கொண்டிருந்தன.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலம் சொந்த மாக இருக்க வேண்டும். இது அவர்களின் ஜீவாதாரமான உரிமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் அவர் மிக உறுதியாக இருந் தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கும் முறையைக் கொண்டு வர இவர்தான் முதல் காரணம். பஞ்சமி நிலம் என்ற பெயர் வந்ததே இவரால்தான். நிலம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சிகள் நடந்தபோது எவ்வளவோ எதிர்ப்புகள், ஜமீன்தார்கள் மட்டுமல்ல, ஜமீன்அல்லாத மேல்தட்டு மக்களும் எதிர்த் தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொந்தமாக நிலமா? சொந்தமாக பயிர் செய்வார்களா? இதை நினைத்துப் பார்க்கவே ஆதிக்கக் கூட்டத்துக்கு சகிக்க முடியவில்லை. அரு வருப்பாக இருந்தது. அன்றைய சுதேசமித் திரன், செங்கற்பட்டு கலெக்டர் ட்ரொமன் ஹுரை இடம் மாற்றம் செய்யக் கோரி அவ ருக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் ‘ட்ரொ மன் ஹுரா’ தாழ்த்தப்பட்ட மக்களின் வர லாற்றில் ஓர் அழியா இடம் பெற்றுள்ளார்.

அவர் தன் நீண்ட விவரமான அறிக்கை யில் கடைசியாக எழுதி வைத்த கருத்துக்கள் நம்மை நெகிழ வைக்கின்றன. “தாழ்த்தப்பட்ட வர்களுக்கு ஓரளவு நிலமும், சொந்தமான குடி சையும், எழுதப்படிக்கத் தெரிவதும், தன் உழைப்பைத் தான் விரும்புவது போல் பயன் படுத்தும் உரிமையும் இருந்தால், அவர்கள் சுயமரியாதை உள்ளவராகி , மரியாதை எனும் திசை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். அப்படியொரு நிலை ஏற்படும்போது, அவர் கள் பட்டுழலும் ஆழ்ந்த துயரம் எப்படி என் னை எழுதிடக் கட்டாயப்படுத்தியதோ, அந்த மகிழ்ச்சியற்ற இக்கால கொடுமையை விட மாறுபட்ட எதிர்காலத்தை நோக்கி, அவர் களால் அடியெடுத்து வைக்க முடியும்.” இப்படிக் கடைசியாக உருக்கத்தோடு எழு திய அவர், சைதாப்பேட்டை கலெக்டர் அலு வலகத்தில் அமர்ந்து கையெழுத்திட்டுள்ளார். தேதி 5.10.1891.

இவரின் குரல் - கோரிக்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு, அங்கேயும் இந்தப் புரட்சித் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாகியது. அவரின் பரிந்துரைப்படி 3,20,000 ஏக்கர் நிலம் “பஞ்சமி நிலம்” என்ற பெயரால் காலம் காலமாக அடிமைப்பட்டிருந்த அந்த மக்க ளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. வரலாறு போற்றும் திட்டம். ஆனால் அந்த நிலங்கள் இப்போது எங்கே இருக்கிறது. யாரிடமிருக் கிறது. ஆதிக்க சக்திகளல்லவா அபகரித்துக் கொண்டன. ஆங்கிலேயன் கொடுத்தான், சொந்த நாட்டுக்காரன் சுருட்டிக் கொண்டான்.

பஞ்சமி நிலம் வழங்கப்பட்டு நூறு ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்ட சூழலில், அந்த நிலங்கள் பலவகையில் யார் யாரிடமோ கைமாறி போய்விட்டன. பஞ்சமி நிலம் மீண்டும் மீட்கப்பட்டு, அவர்கள் வசம் வழங் கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாகி வருகிறது. இடதுசாரி சக்திகள் பலமாக குரல் கொடுத்து வருகின்றன.

ஏற்கெனவே இக்கட்டுரையின் ஆரம்பத் தில் குறிப்பிட்டுள்ள “மெட்ராஸ்” உயர்நீதிமன் றத்தின் தீர்ப்பு ஒன்று நம்மை ஆர்ப்பரிக்க வைக்கிறது. பஞ்சமி நிலங்களை வாரிச் சுருட் டும் சூறையாடிகளுக்கு உயர்நீதிமன்றம் ஆழ மான அழுத்தமான சூடு போட்டுள்ளது. வி.ஜி.பி. என்ற பெயர் பெற்ற, வர்த்தகக் குடும் பம், அதோடு ரியல் எஸ்டேட் நடத்தும் பிரபல் யம் ஆன செல்வக் குடும்பம், உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்தது. அதோடு பிரேம் நகர் மின்வாரிய குடியிருப்போர் சங்கமும் வழக்குத் தொடுத்தது. பஞ்சமி நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டதை ரத்து செய்து, தமிழ்நாடு அரசு வழங்கிய உத்த ரவை எதிர்த்துத்தான் இந்த இரு வழக்குகள். உயர்நீதிமன்றத்தில், பஞ்சமி நிலங்களைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டது அப் பட்டமான சட்டவிரோதம் என தமிழ்நாடு அர சும், நிலம் பறிகொடுத்த சிலரும் பலமாக வாதம் செய்தார்கள்.

பஞ்சமி நிலங்களை வேறு யாரேனும் (தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர) கை கொண் டாலும், தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டாலும், அரசு எந்த நஷ்ட ஈடும் தராமல் திரும்ப எடுத்துக் கொள்ள சட்டப்படி உரிமை உண்டு.

இப்போது நமக்கு ஒரு கேள்வி எழுகி றது? பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்த நிலத் தின் கதி என்ன?

சட்டம் சொல்லுவது:- 10 ஆண்டுகள் ஆனபின்னும் அந்த பஞ்சமி நிலம் இன் னொரு தாழ்த்தப்பட்ட நபருக்குத் தான் மாற்றப் பட வேண்டுமே தவிர, மற்ற ஜாதியினருக்கு வழங்கப்பட இயலாது. அப்படி மாறினால், வழங்கினால் அதை ரத்து செய்ய, அவர்களி டமிருந்து அந்த நிலங்களை நஷ்ட ஈடு வழங் காமல் பறிக்க அரசுக்கு உரிமை உண்டு”.

நீண்ட காலமாக அழுத்தப்பட்ட மக்களை எப்படியாவது மிரட்டி, உருட்டி, தாஜா செய்து, பணம் கொடுத்து ஆதிக்க சக்திகள் பஞ்சமி நிலங்களைப் பறித்துவிடும் என்ற நீண்ட கால எச்சரிக்கைத் தன்மையோடு இப்படிப்பட்ட நிபந்தனைகளை சட்டத்தில் சேர்க்க வெள் ளை கலெக்டர் எச்சரிக்கையுடன் செயல் பட் டார். ஆனாலும் அந்தோ! இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் பஞ்சமி நிலங்கள் எத்தனையோ கைகள் மாறி விட்டன.

அன்று ஆங்கில அரசு போட்ட அந்தச் சட்டத்தின் அடிப்படையில் தான் தமிழ்நாடு அரசும் பஞ்சமி நிலங்கள் பறிபோகாமல் இருக்க அடுத்தடுத்து அரசாணைகளையும் நிறைவேற்றின.

சட்டத்தை மீறி, அரசாணைகளை அசட் டை செய்துவிட்டு, பஞ்சமி நிலங்கள் பறிக்கப் படுவது நடந்து கொண்டுதான் இருந்தது. அதை எதிர்த்துத்தான் அரசு, வி.ஜி.பி. பன்னீர் தாசிடமிருந்து பஞ்சமி நிலங்களை நஷ்ட ஈடின்றி மீட்டது. அதை எதிர்த்துத்தான் வி.ஜி.பி. வழக்குத் தொடுத்தது. ஆனால் உயர் நீதிமன்ற “டிவிஷன் பெஞ்ச்” வழக்கை தள்ளுபடி செய்தது. நீதிபதி, வெள்ளையர் கொண்டு வந்த சட்டத்தையெல்லாம் சொல்லி, வலிவான காரணங்களைக் காட்டி, தெளிவாக தீர்ப்புகள் எழுதி, முறையீட்டை தள்ளுபடி செய்தார்.

அதேபோலத்தான் சிறுதாவூர் நிலப் பறிப்பு எனும் பெரிய பிரச்சனை கிளம்பியது. விசாரணை கமிஷனின் முடிவுகளும் வெளி வந்துவிட்டன. தவறுகள் மிக எச்சரிக்கையாக சட்ட சிக்களுக்குள் சிக்காமல் செய்யப்படு கின்றன. தமிழ்நாடு அரசு ‘யார் தவறு செய்தா லும் குற்றம் குற்றமே!’ - என்ற தொனியில் பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட வேண்டும். பஞ்சமி நிலங்கள் பஞ்சமர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

No comments:

Post a Comment