Saturday, June 12, 2010

பழங்குடியினர் உரிமைகளுக்கான சிறப்பு மாநாடு -பிருந்தா காரத் எம்.பி

பழங்குடியினர் உரிமைகளுக்கான சிறப்பு மாநாடு -பிருந்தா காரத் எம்.பி.

பழங்குடியினர் உரிமைகளுக்கான சிறப்பு மாநாடு ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறுகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 230 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை மாநாட்டில் பதிவுசெய்வதுடன், உடனடி எதிர்கால நடவடிக்கைகளையும் மாநாட்டில் திட்டமிடுகிறார்கள்.

மாநாட்டின் நிகழ்ச்சிநிரலில் முக்கியமான ஒன்று, தேசிய அளவில் பழங்குடியினர் உரி மைகளுக்கான தேசிய மேடை ஒன்றை அமைப்பதாகும். இவ்வமைப்பானது பழங்குடி யினர் உரிமைகளுக்கான இயக்கங்களை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல உதவிடும்.

தொழிலாளர் வர்க்கம், விவசாய வர்க்கம் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதைப் போன்று, பழங்குடியினர் உரிமைகளுக்கான போராட்டமும் மிக முக்கியமானதேயாகும். மேலும், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கையின் அடிப்படை சமூக - பொருளாதாரத் தேவைகளிலும் பழங்குடியின மாணவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிகவும் அடித்தட்டு நிலையிலேயே இருந்து வருகிறார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராட் டங்களை நடத்தி வரும் பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்தவர்களும் இச்சிறப்பு மாநாட்டில் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கிறார்கள். தங் கள் அனுபவங்களை மாநாட்டில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும் சரி, இப்போதைய ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசாங்கமும் சரி, பழங் குடியினர் உரிமைகளைப் பறிப்பதில் முனைப் பாகச் செயல்பட்டு வருகின்றன. அவர்களைத் தங்கள் நிலங்களிலிருந்து கட்டாயமாக வெளி யேற்றுதல், பழங்குடியினர் நிலங்களை கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு அளித்திட முனை தல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள் ளன. ஆட்சியாளர்களின் கொள்கைகள் பழங் குடியினர் மத்தியில் தொடர்ந்து உணவுப் பாது காப்பின்மையையும், ஊட்டச்சத்தின்மையை யுமே ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளீடான வளர்ச்சி குறித் துத் தம்பட்டம் அடிப்பதெல்லாம் கேலிக்கூத்தாகும்.

பழங்குடியினர், சமூக ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் கடும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ளார்கள். பழங் குடியினரில் பெரும் பகுதியினர் நாட்டில் மிக வும் மோசமாக சுரண்டப்படும் வர்க்கங்க ளைச் சேர்ந்தவர்கள் ஆவர். எனவே, இவர்கள் புரட்சிகர சமூக மாற்றத்திற்கான போராட்டத் தின் முக்கியமான முன்னணிப் படையாகும்.

பழங்குடியினரில் 70 விழுக்காட்டினர் சிறிய மற்றும் நடுத்தர விவசாய வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மிகவும் சிறிய அளவில் நிலங்களை வைத்துப் பயிர் செய்து வருகிறார்கள். அவற்றில் உற்பத்தித் திறனும் மிகவும் குறைவேயாகும். 30 விழுக்காட்டுக் கும் மேலான பழங்குடியினர் நிலமற்றவர்கள். 15 முதல் 20 விழுக்காட்டினருக்கிடையே உள்ளவர்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் வாழுமிடங்கள் மிகவும் கனிம வளம்மிக்க செறிவான நிலப்பகுதிகளா கும். இவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக் குத் தாரைவார்ப்பதற்காக, ஆட்சியாளர்கள் பழங்குடியினரை தாங்கள் வாழும் பகுதிகளி லிருந்து விரட்டியடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர்.

இவ்வாறு நில உரிமைகள், நிலச்சீர்திருத் தங்கள், நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டங்கள் இச்சிறப்பு மாநாட் டின் மையப் பிரச்சனைகளாக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை.

பழங்குடியினர் உரிமைகள் சட்டம் அமல் படுத்தப்படுவது மிகவும் மோசமான நிலை யில் உள்ளன. பல மாநிலங்களில் வனத்துறை அதிகாரிகள் தலையீடு தேவையில்லாமல் இருக்கின்றன. பழங்குடியினர் விவகாரங்க ளுக்கான அமைச்சகம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2010 மார்ச் 31 தேதிவாக்கில் நாட்டில் 27 லட்சத் திற்கும் அதிகமான அளவில் நில உரிமைகள் கோரி மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற் றில் நாலில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அதாவது சுமார் 7 லட்சம் பேர்களுக்கு மட் டுமே நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

பல மாநிலங்களில் பழங்குடியினரை மாவோயிஸ்ட்டுகள் பலிகடாக்களாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எதிர்த்திடும் அனைவரையும் கொடூரமாகக் கொலை செய்து வருகின்றனர். சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களை மாவோயிஸ்ட்டு களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஆட்சி யாளர்கள், பழங்குடியினர் மீது ஒடுக்குமுறைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். அப்பாவி பழங்குடியின மக்கள் ஒரு பக்கத்தில் மாவோ யிஸ்ட்டுகளாலும், மறுபக்கத்தில் ஆட்சியாளர் களாலும் தாக்கப்படும் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் பழங்குடி யின மக்களின் சிறப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெறுகிறது. பழங்குடியினரின் உரிமை களைப் பாதுகாத்திட போராட்டப்பாதையைத் தீர்மானிக்கும் மாநாடாக இது அமைந்திடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

No comments:

Post a Comment