THEEKKADHIR DT.13.8.10 குடியாத்தம் நகரில் சமூக விரோதிகளால் தலித் மற்றும் இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக நியாயம் கோரி போராடியவர் களை காவல்துறை அராஜகமாக கைது செய்து சிறையில் அடைத் துள்ளது.
இந்த அராஜகத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன் மையாகக் கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக் கை வருமாறு:-
வேலூர் மாவட்டம், குடியாத் தம் நகர் 36வது வார்டில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக புறம் போக்கு நிலத்தில் சொந்தமாக வீடு கட்டி, குடிசை போட்டு வசித்து வந்த 26 தலித் குடும்பங் களையும், 10 இஸ்லாமிய குடும் பங்களையும் திடீரென்று 14.4.2010 அன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மொசைக் செல்வம் மற்றும் பார்த்தீபன் ஆகிய இருவரும் சேர்ந்து அரா ஜகமான முறையில் 36 குடும்பங் களையும் அப்புறப்படுத்தி, புல் டோசர்கள் மூலம் வீடுகளையும் தரைமட்டமாக்கிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட 36 குடும்பங்களைச் சார்ந்தவர் களும் மாவட்ட ஆட்சியரை அணுகி முறையிட்டதில் பயன ளிக்காமல் மார்க்சிஸ்ட் கட்சி யை அணுகிய போது மாவட்டச் செயலாளர் ஏ. நாராயணன் மற் றும் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா ஆகியோர் மாவட்ட ஆட்சி யரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு நியாயம் வழங்க கேட்டனர். கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஏற்காத கார ணத்தினால் கட்சியின் சார்பில் ஜூலை 8-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 12.8.2010 அன்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குடியேறும் போராட்டம் என்று அறிவித்த பிறகு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மேற்கண்ட இருவரும், சிபிஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா தங்களிடத்தில் ரூ. 20 இலட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக மாவட்ட ஆட்சியரிடம் பொய்ப் புகார் அளித்து பத்திரிகையாளர் களிடமும் அவதூறு தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். தாங் கள் செய்த சமூக விரோத செய லை மறைத்திடவும், 12.8.2010 அன்று நடக்கும் போராட் டத்தை திசை திருப்பிடவுமே மேற்கண்ட இருவரும் பொய்ப் புகார் அளித்துள்ளனர். பொய்ப் புகார் அளித்துள்ள இவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக் கை எடுப்பதற்கு பதிலாக பாதிக் கப்பட்ட மக்களுக்காக போராடு பவர்களை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கிட வியாழனன்று மார்க் சிஸ்ட் கட்சி சார்பாகவும், தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார் பாகவும் மறியல் போராட் டம் நடைபெற்றது. மறியல் போராட் டத்தில் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் பி. சம்பத், கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஏ. நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே. சாமு வேல்ராஜ், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தயாநிதி மற்றும் குபேந்திரன் ஆகியோருடன் குடியாத் தம் வட்ட தாசில்தார், தாழ்த்தப் பட்டோர் நல தாசில்தார், வரு வாய் கோட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அராஜகமாக 36 குடும் பங்களை அப்புறப்படுத்திய, குடி சைகளை தரைமட்டமாக்கிய மொசைக் செல்வம், நகர்மன்ற உறுப்பினர் பார்த்தீபன் ஆகி யோர் மீது நடவடிக்கை எடுப் பது என்றும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான மாற்று இடம் அளிப்பது என்றும்; மாற்று இடம் அளிக்கப்படும் வரை குடியிருப்பதற்கு தற்காலிக ஏற்பாடு செய்வதென்றும் முடி வாகி ஒப்பந்தத்திலும் தலைவர் களுடைய கையெழுத்தைப் பெற் றனர். ஆனால், திடீரென்று ஒப் பந்த நகலை வருவாய் வட் டாட்சியர் எடுத்துச் சென்று விட் டார். அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை அதிகாரிகள் தலை வர் களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன் பாடு ஏற்பட்ட சூழலில் திடீ ரென்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக் கிறது. பேச்சுவார்த்தையில் பிரச் சனை முடிகின்ற சூழலில் அதை முடிக்காமல் முறித்ததற்கு அரசி யல் உள்நோக்கம் உள்ளது என மாநில செயற்குழு சுட்டிக்காட்டு கிறது. நீண்ட காலமாக வீடு கட்டி குடிசை போட்டு வாழ்ந்து வந்த தலித் மற்றும் இஸ்லாமிய குடும்பங்களை பாதுகாப்பதற்கு பதிலாக ரியல் எஸ்டேட் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் செயல்பட்டு வருவதை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. சட்டமன்ற உறுப் பினர் ஜி. லதா மீது களங்கம் கற் பிக்கும் நோக்கத்தோடு பொய்ப் புகார் அளித்துள்ளவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறையையும், மாநில அரசையும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது |
No comments:
Post a Comment